சஜீத் முதுகில் குத்தும் சிறுபான்மைக் கட்சிகள்!

தேர்தல் வெற்றிக்காகாகத் தம்முடன் கூட்டணி சமைத்துக் கொண்டு அதன் பின்னர் சிறுபான்மைக் கட்சிகள் தமக்கு வழக்கமாக ஆப்பு வைப்பதால் இந்த முறை உள்ளூராட்சித் தேர்தலின் போது அந்தக் கட்சிகளுக்கு சஜித் அணி தக்க பாடம் கற்றுக் கொடுத்திருக்கின்றது. இதனால் தந்ததை எடுத்துக் கொண்டு கூட்டணியில் இவர்கள் போட்டியிடுகின்ற அதேவேளை சில இடங்களில் வித்தியாசமான வியூகங்களில் போட்டியிடுவதாகவும் கதை சொன்னார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன வென்றால் இவர்களின் வியாபாரத்தை நன்கு தெரிந்து வைத்திருக்கின்ற சஜித் அணியினர் ரணில் போல் அல்லாமல் கண்டிப்பாக இருந்திருக்கின்றனர்.
இதற்கு நல்லதொரு சான்றுதான் அண்மையில் நடந்த ரணிலின் புதிய பாராளுமன்ற அமர்வை பிரதான எதிரணியான சஜித் அணி பகிஸ்கரித்த போது இவர்கள் போய் அந்த அமர்வில் கலந்துகொண்டு விருந்துபசாரத்திலும் பங்கு பற்றி இருந்ததை நாம் பார்க்க முடிந்தது. இப்பபோது இவர்கள் அதற்குச் சொல்லும் விளக்கத்தை பார்ப்போம். சம்பந்தன் அணி கதை இதில் விதிவிலக்கானது.
மலையக மக்களின் பல்வேறு பட்ட  பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி நமது மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியாக பேச வேண்டும் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அதன்மூலம் இந்நாட்டின் முழுமையான குடிமக்களாக மலையக தமிழ் மக்களும் வாழும் நிலை ஏற்பட வேண்டும் என நாம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எதிர்பார்க்கிறோம்.

இது இன்று  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் இருந்து வெளிப்பட்டு இருப்பது பற்றி மகிழ்ச்சியடைகிறோம். இனி இதை உரையுடன் நிறுத்தி விடாமல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடைமுறையில் செய்து காட்டவேண்டும் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

எட்டாம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை பிரகடன உரை தினத்தன்று நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் சபையில் பிரசன்னமாகி இருந்தோம். எம்முடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய எதிரணி கட்சிகளின் எம்பீகளும் சபையில் பிரசன்னமாகி இருந்தோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரையை நேரடியாக எதிர்கொள்ளவே நாம் பாராளுமன்றத்துக்கு சென்றிருந்தோம். ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. பாராளுமன்றத்துக்கு செல்லாமல் உரையை பகிஸ்கரிப்பது என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவு எம்முடன் சேர்ந்து எடுக்கப்படவில்லை. ஆகவே அதுபற்றி எமக்கு தெரியாது.

எதிர்வரும் தினங்களில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான உரை தொடர்பாக எமது கருத்துகளை நாம் பாராளுமன்றத்தில் வெளியிடுவோம். அதேவேளை, மலையக மக்களின் பல்வேறு பட்ட  பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். இதை உரையுடன் நிறுத்தி விடாமல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடைமுறையில் செய்து காட்டவேண்டும்.

Previous Story

ஜனாதிபதி அலுவலகம்:பதிவு செய்யப்பட்ட 56 வாகனங்களை காணவில்லை

Next Story

அஷரஃப் பாணியில் அணுரா அதிரடி!