10.09.2023வாராந்த அரசியல்

-நஜீப்-

1

கனவில் வளரும் பொருளாதாரம்!

உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தை உருவாக்கியவர்தான் நமது பசில் ராஜபக்ஸ. இப்படியான ஒரு கதையை நமக்கும் உலகத்துக்கும் சொல்லி இருக்கின்றார் மொட்டுக் கட்சி செயலாளர் சாகர காரியவாசம். இது தொடர்பான மேலதிக விபரங்களை அவர் நமக்குத் தரவில்லை. பசில் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தை அவர் நமக்குத் தந்தார் என்று அவர் அந்த ஊடகச் சந்திப்பில் சொல்லி இருந்தார்.

இதில் நமக்கு உள்ள கேள்வி என்னவென்றால் இப்படி இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டிருந்த நமது நாடு இந்த ஓரிரு வருடங்களுக்குள் உலகில் மிகவும் கீழ் மட்டப் பொருளாதாரத்தை நோக்கி வீழ்ந்தது எப்படி என்பதுதான் அதிர்ச்சியான செய்தியாகும். அதே நேரம் இன்று ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் நாம் ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த படியாக இருந்தோம்.

சிங்கப்பூர் கூட அன்று நம்மைப்போல பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என அவாவில் இருந்ததாகவும் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் நம்மவர்கள்.! மீண்டும் இலங்கை எப்போது இரண்டாம் இடத்துக்கு சகரவின் கனவில்தான் வந்து போனது என்பதனைப் பொருளாதார நிபுணர்கள் கண்டுபிடித்து உலகிற்கு அறிவிக்க வேண்டும்.

2

ஐதேக. மாநாடு  நடக்காது!

10 ம் திகதி நடக்க இருந்த ஐதேக. கட்சிக் மாநாடு சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தலின்றி அது தள்ளிப் போடப்பட்டிருக்கின்றது. இதே கால நிலையில் கொழும்பில் ஆசியக் கிரிக்கட் போட்டிகளுக்கு இலங்கை ஒரு கட்டத்தில் ஏற்பாடுகளைச் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குறைந்தது 70 தொகுதிகளிலாவது செயற்குழுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தலைவர் ரணில் கட்டளையிட்டிருந்தார். ஆனால் செயலாளர் ரங்கே பண்டாரே 153 தொகுதி மட்டக் கூட்டங்களை நடத்தி முடித்திருந்தார். இன்னும் ஏழு அல்லது எட்டுக் கூட்டங்களை மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியாக வேண்டி இருந்தது. இந்த நிலையில் வானிலையைக் காரணம் காட்டி ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது நம்ப முடியாமல் இருக்கின்றது.

அப்படி அந்தக் பேராளர் கூட்டம் நடந்திருந்தாலும் ஏதே ஒரு மண்டபத்துக்குள்தான் அது நடந்திருக்க வேண்டும். இந்தப் பின்னணியில் எப்படிக் கால நிலை ஐதேக. வுக்குக் குறுக்காக வர முடியும் என்று கேட்கத் தோன்றுகின்றது. அப்படிக் கூட்டத்தைக் கூட்டி என்னதான் நமக்கு அறிவிப்புச் செய்ய வேண்டி இருக்கின்றது என்ற எண்ணத்தில் கூட்டத்தை சொல்லாமல் கொள்ளலாம் ஒத்திவைத்து விட்டார்களோ தெரியாது.

3

Sri Lanka: Third Reich in the making? • Sri Lanka Brief

பல்கலைகழகமா? தேர்தலா?

அண்மையில் இரத்தினப்புரி சீவலி மகளீர் கல்லூரியில் மாணவர்களுடனான ஒரு சந்திப்பில் ஜனாதிபதி ரணில் ஈடுபட்டிந்தார். அங்கு மாணவர்கள் முன் பேசுகின்ற போது எதிர்வரும் காலங்களில் தான் புதிதாகப் பத்துப் பல்கலைக்கழகங்களை நாடுபூராவிலும் நிறுவ இருப்பதாக அறிவித்தார். அதுவும் தொழிநுட்பம் சார்ந்த பல்கலைக்கழகங்களாக அமையும் என்று அவர் அங்கு தெரியப்படுத்தினார்.

குறைந்தது தற்போதய சூழ்நிலையில் நாட்டில் புதிதாக ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதாக இருந்தால் காணி நிலம் கட்டிடங்களுக்கு மட்டும் குறைந்தது (1000)  ஆயிரம் கோடி ரூபாய்களாவது தேவைப்படும். அதுவும் மனிதன் கட்டுவது தொழிநுட்பக் பல்கலைகழங்கள் என்று வேறு கதைக்குது. அதற்குத் தேவையான தளபாடங்கள் விரிவுரையாளர்கள் ஆளாணிகள் என்றெல்லாம் வேறு செலவுகள் வரும்.

அப்படிப் பார்க்கும் போது ஒரு பல்கலைக்கழகத்துக்கு (10000) பத்தாயிரம் கோடியாவது சமையும். மொத்தம் ஒரு இலட்சம் கோடி ரூபாய் தேவை. தேர்தலுக்கே காசு இல்லை. மனிதன் பல்கழைக்கழகம் பத்துக் கட்டுதோ இல்லையோ கதையைப் பார்த்தால் அவர் பத்துப் பல்கலைக்கழம் கட்டும் மட்டும் நாட்டில் தேர்தலுக்கு வாய்பு வராது. தேர்தலைவிட குழந்தைகளின் கல்விதானே முக்கியம்.

4

காணாமல் போன சேனல் 4

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடுபூராவிலும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நாட்களில் ராஜபக்ஸாக்கள் இது இஸ்லாமிய அடிப்படை வாதிகளான ஐஎஸ்ஐஎஸ் பார்த்த வேலை அதற்காக அவர்கள் உரிமையும் கோரி இருக்கின்றார்கள். திரும்ப எடுத்து என்ன இதனை சேனல் 4 எங்கள் தலைகளில் மாட்டிவிடப் பார்க்கின்றது.

என்று தமது கையாட்கள் மட்டும் அரச ஊடகங்களைப் பாவித்து கதை சொல்லிக் கொண்டு போகின்றது. சூத்திரதாரி என குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஸ் சாலே அந்த நாட்களில் நான் நாட்டிலே இருக்கவில்லை என்று காரணம் சொல்கின்றார். விமல் போன்ற  அரசியல் வாதிகள் மனைவி, பல கடவுச்சீட்டுக்கள் பாவிக்கின்ற நாட்டில் உளவுத்துறை முக்கிய புள்ளி எத்தனை வேண்டுமானால் பாவிக்கலாமே?

இராஜங்க அமைச்சர் பிள்ளையான் தனது பெயரைப் பாவித்து மௌலான அரசியல் தஞ்சம் எதிர்பார்க்கின்றார். தனக்கு எதுவுமே தெரியாது எனக் கைவிரிக்கின்றது பிள்ளை. இதற்கிடையில் நாமல் ராஜபக்ஸாவும் மடிகே பஞ்ஞாலோக தேரரும் அந்த பதிவை சேனல் 4 நீக்கி விட்டது என்று துல்லிக் குதித்திருந்தனர். ஆனால் உண்மை அப்படி இல்லை யார் வேண்டுமானாலும் அதனை இப்போது பார்க்கலாம்.

5

image 6457a0f102 in sri lankan news

துப்பாக்கிப் பித்தும் – கழுத்தறுப்பும்!

முதலில் துப்பாக்கிச் கதையைப் பார்ப்போம். காலம் பூராவும் துப்பாகி வித்தை காட்டும் ஒரு குடும்பம் இது. தந்தையும் ஒரு நல்ல துப்பாக்கி வேட்டைக்காரன். கண்டி-உடதலவின்ன 10 பேர் படுகொலையிலும் இவர்கள் மீது பழி. ஒரு முறை கண்டி நகரில் பட்டப் பகலில் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கியால் சூட்டு மக்களை அச்சமூட்டிவர்கள்.

சிறைக்கு காதலியுடன் போய் தமிழ் கைதியின் மார்பில் துப்பாக்கியை வைத்து சூட முயன்ற இந்த இராஜங்க அமைச்சர், சில தினங்களுக்கு முன்னர் மாதிவெலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் போதை தலைக்கேரி ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தி இருக்கின்றார். முறைப்பாடு செய்யப்பட்டாலும் ராஜாக்களுக்கு வேண்டியவர் என்பதால் நடவடிக்கைக்குத் தயக்கமாம்.

இப்போது களுத்தறுப்பு கதை. சு.கட்சியின் தலைவர் மைத்திரி. செயலாளர் தயாசிரி. கடைசி நிமிடம் வரை இருவரும் ஒன்றாக இருந்துவிட்டு இரவு பிரிந்திருக்கின்றார்கள். செயலாளர் வெளியே போகும்வரை இருந்த மைத்திரி தயாசிரியின் பதவியைப் பிடுங்கி சரத் ஏகநாயக்காவை அந்த இடத்தில் அமர்த்தி இருக்கின்றார். செய்தி அறிந்ததும் தந்தையைப் போல மதித்தேன் இப்படிப் பணிட்டாரே என்று தயா புலம்பலாம்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்ப்பில் நெருக்கடிகளுக்கு இலக்காகி இருக்கும் மைத்திரியை அவரது சட்டத்தரணி முஸ்தபா ரணிலுடன் நெருக்கமாக இருக்கமாறு கொடுத்த ஆலோசனைதான் இந்தக் களுத்தறுப்பு என்றும் ஒரு கதை.

நன்றி: 10.09.2023 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

சேனல் 4 : ஆசாத் மௌலானா யார்?

Next Story

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் சர்ச்சை!