10 நாட்களுக்கு பின் மக்களுக்கு  மிகப் பெரும் நெருக்கடி

சிறி லங்கா எரிபொருள் பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் அடுத்த 10 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருக்கின்றது.

எனினும், பற்றாக்குறையாக இருக்கும் தொகையை அமைச்சரவை வழங்கமென நம்புகிறேன் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாள்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக சுமார் 200 மில்லியன் டொலர்கள் அவசியம்.

இதற்குப் பற்றாக்குறையாக இருக்கும் பணத்தை உடனடியாக வழங்குமாறும் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.

அதேவேளை, ஜனவரி மாதத்தில் நாட்டின் பயன்பாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 350 மில்லியன் டொலர்கள் அவசியம். தற்போது பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் 150 மில்லியன் டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

 

Previous Story

UAE :சுற்றுலா எங்கெல்லாம் செல்ல வேண்டும்?

Next Story

கொழும்பு CID 5 வது மாடியில் பெண் குதித்து தற்கொலை