–நஜீப்–
நன்றி: 09.02.2025 ஞாயிறு தினக்குரல்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஜித் தலைமையிலான எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்; சந்திப்பொன்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் நாமல் திலித் போன்றவர்கள் கலந்து கொண்டு சில தீர்மானங்களுக்கு வந்திருப்பதாக ஒரு செய்திக் குறிப்பில் பார்க்க முடிந்தது.
அதில் அரசாங்கம் முன்வைக்கின்ற நல்ல திட்டங்களுக்கு ஆதரவும் பிழையான திட்டங்களுக்கு கூட்டாக எதிப்பும் எனத்தீர்மானமாம். கடந்த காலங்களில் இன வன்முறையைத் தூண்டிய ஊடக முதலாளிமாரும் அந்தக் கூட்டணியில்.
சமூகத்துக்கு எதிரான இன வன்முறையாளர்கள் இருக்கும் ஒரு கூட்டணியில் சிறுபான்மை பிரதிநிதிகள் குறிப்பாக சிரீதரன் ஹக்கீம் ரிசாட் போன்றவர்கள் இணைந்து தீர்மானம் என்பதை அவர்கள் சார்ந்த சமூகங்கள் எப்படி ஜீரணிக்கும்?
ராஜபக்ஸாக்களை பெரும் மக்கள் விரோதிகள் கொள்ளையர்கள் என்று மேடைகளில் கூவித்திரிந்த சஜித் இன்று அவர்கள் அணியுடனே இணைத்து நியாத்துக்கான கூட்டணிக்கு எப்படி வர முடிந்தது? இது எத்துனை முரண்பாடு?
வைத்தியமும் பைத்தியமும்!
–நஜீப்–
நன்றி: 09.02.2025 ஞாயிறு தினக்குரல்
இந்தப் பகுதியில் முன்பொருமுறை பார்வை இழந்த மக்களின் பிரதிநிதி ஒருவர் வரலாற்றில் முதன் முறையாக நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி சொன்ன நாம் மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் பிரதிநித்துவம் இந்த முறை கிடைத்திருக்கின்றதோ என்று கேள்வி எழுப்பி இருந்தோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வில் ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டடு முதலில் வைத்தியரிடம் போய் உமது தலையைப் பரீட்சிப் பார்த்துக்கொள் என்று சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிரி தயசேக்கர விரல் நீட்டி சுட்டிக்காட்டி இருந்தார்.
சம்பந்தப்பட்ட நபரின் பெயரை நாம் நாகரீகம் கருதி பதிவதை தவிர்த்துக் கொள்கின்றோம். தயாவின் கதைப்படி நமது முன்னைய பதிவு மிகச்சரியானது என்று உறுதியாகி இருக்கின்றது.
பைத்தியத்துக்கு வைத்தியத்திடம் போய் மருந்தா? கடவுளே பைத்தியம் யார் வைத்தியர் யார் எதுவுமே புரிதில்லையே!