லெபானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நையீம் காஸிம் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெஸ்பொல்லா புதய தலைவராக ஷேக் நையீம் காஸிம் தேர்வு
மேற்காசியாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, இஸ்ரேல் தொடர்ந்த போர் ஓராண்டை எட்டியுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை தீவிரமாக எதிர்க்கும் மற்றொரு அண்டை நாடான ஈரானும், அந்த அமைப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறது.
இந்நிலையில் கடந்த செப். 27ல் லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய பட்ட வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதையடுத்து ஹெஸ்பொல்லா அமைப்பின் துணை தலைவராக இருந்த ஷேக் நையீம் காஸிம் தலைவராக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.