ஹீரோ உருவாக்கம்!

-நஜீப்-

அரசாங்கம் தனது பலத்தை காட்டுவதற்குத்தான் அனுராதபுரம்-சல்காது கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் அரசின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை. நாம் இன்னும் வலுவாக இருப்பதாக மக்களுக்கு காட்சிப்படுத்த அவர்கள் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து எதிர்க் கட்சிகளுக்கு அச்சுறுத்தலை விடுத்திருக்க வேண்டும்.

இது ஒரு பேரணியை நடத்த வேண்டிய நேரம் அல்ல. எனவே மக்கள் அரசுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் இந்த நேரத்தில் அவர்கள் இப்படியாக ஒரு கூட்டத்தை நடத்தியது பெரும் வெற்றி என்று கணக்குப் போட்டிருக்கலாம். ஆனால் கூட்டத்தக்கு அழைத்து வரப்பட்டவர்கள் எப்படி அழைத்து வரப்பட்டார்கள் என்பது ஏற்பாட்டாளர்கள் நன்கு அறிவார்கள்.

அவர்கள் எதிரணியை அச்சுறுத்தக் கூட்டம் போட்டாலும் களத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அவர்கள் அறிந்துதான் இருக்கின்றார்கள். இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பீ.ஆரை ஹீரோவாக்க முயற்ச்சிகள் நடந்திருந்தது என்றும் கட்சிக்குள் கருத்துக்கள் இருக்கின்றன.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 13.02.2022

Previous Story

இஸ்லாமிய பெண்களின் ஆடைகளுக்கு தடை உள்ள நாடுகள்

Next Story

வடகொரியாவில் ஆயுதம் வாங்கிய இரகசியத்தை பசில் வெளியிட்டது ஏன்?