செய்தி ஹீரோவாகும் ஹிருனிகா July 9, 2022July 9, 2022 -நஜீப்- படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் மகள் ஹிருனிக்க, தற்போது இலங்கை அரசியலில் வைரலாகி வருகின்றார். அவர் ஒரு சட்டத்தரணியும் கூட. சினிமாப் படங்களில் வரும் ரம்போ பணியில் அவர் தனித்து அதிரடி ஆட்டத்தில் இறங்கி இருக்கின்றார். ஜனாதிபதியை வீடு தேடிப் போய் தொடர்ந்து சண்டைக்கு இழுத்து வருகின்றார். அதே போன்று பிரதமரையும் தேடிப் போய் தன்னுடன் மோதவருமாறு அழைத்திருக்கின்றார். பாதுகாப்புப் படைகளுக்கும் இது பெரிய தொல்லையாக மாறி இருக்கின்றது. அவர் ஜனாதிபதி இருப்பிடப் போய் நுழையும் வரை உளவுத்துறைக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. சில அரசியல்வாதிகளைப் போல் பெரும் தொகை மக்களை புடைசூழ வைத்துக் கொண்டு அவர் இந்த சண்டித்தனத்தை பண்ணவில்லை. தனியாக அல்லது ஒரிவருடன்தான் அவர் ரம்போப் பாணியில் களத்தில் போய்க் குதிக்கின்றார். அவருடன் ஒப்பு நோக்கின்ற போது தலைவர் சஜீத் வேஸ்ட் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று சஜித் அணியில் ஹிருனிதான் ஹீரோ. அதே நேரம் அவருக்கு ஆபத்துக்களும் நிறைய இருக்கின்றது என்பதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். நன்றி:10.07.2022 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in March 13, 2026March 13, 2026 இசுரேல் இப்போ ம..ரண அடி வாங்க காரணமே ஜெராட் குஷ்னர் தான்? | March 12, 2026March 12, 2026 மொசாட் உளவாளிகள் பற்றி அதிரடித் தகவல்கள்! March 12, 2026March 12, 2026 ஈரானின் முக்கிய KHARG ISLAND March 12, 2026March 12, 2026 Mosquito Fleet Vs Ghost Fleet March 12, 2026March 12, 2026 ஈரானின் 42-வது அலைத் தாக்குதல் ஆரம்பம் March 12, 2026 ஈரான் போட்ட இறுதி எச்சரிக்கை! Previous Story தற்காலிக அதிபராகிறார் சபாநாயகர் அபேவர்தனா? Next Story அரசாங்க ஊடகங்களை தாக்கும் முயற்சிக்கும் போராட்டக்காரர்கள்