ஹாங்காங்கில் இன்று சட்டசபைக்கானதேர்தல

சீனா கொண்டு வந்த அரசியல் சட்ட மாற்றங்களுக்குப் பிறகு ஹாங்காங்கில் இன்று முதலாவது சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.தேசபக்தர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் வகையில் தேர்தல் நடைமுறை மாற்றப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது.ஆனால் இது நாட்டின் ஜனநாயகக் குரல்களை முடக்கும் செயல் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் ஹாங்காங்கு தனி நிர்வாக நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. கடந்த மார்ச் மாதம் சீனா இயற்றிய சட்டத்தின் மூலம் இதற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Previous Story

பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் வெடிப்பு: 15 பேர் பலி

Next Story

சிறுபான்மை உரிமை தினம்-18