“ஹமாஸ் போர் எப்போது தான் முடியும்..” ஒரே வரியில்….!

சர்வதேச அழுத்தம் அதிகரித்தாலும் போர் தொடரும் -இஸ்ரேல்

ஜெருசலேம்: சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் குழுக்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

போர் குறித்துபைடன் நேற்று தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருந்தார். இது குறித்து அவர்,காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது” என்றார்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது குறித்து பகிர்ந்த வீடியோவில், “நாங்கள் கடைசி வரை போராடுவோம். இதற்குமேல் பேச எதுவுமில்லை. போர் நிறுத்தத்துக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்தாலும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்பதை வலியுடன் பதிவு செய்கிறேன். யாராலும் எங்களைத் தடுக்க முடியாது. வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம். அதைவிட எங்களுக்கு பெரிது எதுவும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார். தற்போதுவரை இஸ்ரேல் மக்கள் 1,200 (?) பேரும், பாலஸ்தீன மக்கள் 18,500-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், இது எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளித்துள்ளார், இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.. முதலில் கடந்த அக், 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. மேலும், பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றன.

 When Hamas war will end explains Israel Defence Minister Gallant

இதில் முதலில் சற்று தடுமாறினாலும் அதன் பிறகு இஸ்ரேல் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது.. ஹமாஸின் காசா பகுதியில் இறங்கிய இஸ்ரேல், தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்கா: இந்தப் போருக்குச் சர்வதேச அளவில் அழுத்தமும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்தப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், இது பிராந்திய போராக மாறாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே அனைத்து நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்துகிறது. இருப்பினும், தற்போதைய சூழலில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது. இஸ்ரேல் அடைய வேண்டிய இலக்குகளை அடைந்த பிறகே காசாவில் ஹமாஸுக்கு எதிரான இந்த போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் கூறியுள்ளார். வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் ஜபாலியா மற்றும் ஷேஜய்யா பட்டாலியன்கள் அழிக்கப்படும் விளிம்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்: இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த போர் அதன் இலக்குகளை அடையும் போது முடிவுக்கு வரும். அமெரிக்கா சொல்லும் அனைத்தையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம். அதை ஆலோசனை செய்கிறோம். அமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்து இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

ஹமாஸ் வசம் இன்னுமே பல பிணையக் கைதிகள் இருக்கிறார்கள். நாங்கள் ராணுவ ரீதியாக அழுத்தத்தை அதிகரித்தால் கூடுதலாகப் பிணையக் கைதிகளை விடுவிக்க முடியும் என்ற நம்புகிறோம். அதை நோக்கியே நடவடிக்கை எடுப்போம். ஹமாஸ் கோட்டைகளான ஜபாலியா மற்றும் ஷேஜாயாவில் அவர்கள் அழியும் தறுவாயில் இருக்கின்றனர். இப்போது பல பகுதிகளில் ஹமாஸ் படை தொடர்ச்சியாகச் சரணடைந்து வருகிறது.

போர் விதிமுறைகள்: வெல்லவே முடியாத படைகளாகக் கருதப்பட்ட படைகளை நாங்கள் வரிசையாக வென்று வருகிறோம். அதேநேரம் போர் விதிமுறைகளை நாங்கள் மீறுவதில்லை. யார் சரணடைந்தாலும் அவரது உயிர் காப்பாற்றப்படும் சரணடைந்தோரிடம் கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை செய்து வருகிறோம்.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை ஹமாஸ் தலைவரும் ஒன்றுதான் சாதாரண வீரனும் ஒன்றுதான். எனவே, உயிர் பிழைக்க வேண்டும் என்றால் சரணடைந்துவிடுங்கள். உங்களுக்கு வேறு வழியில்லை. கடந்த மாதத்தில் மட்டும் காசா பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை நாங்கள் கைது செய்துள்ளோம்” என்றார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. மொத்தம் 7 நாட்கள் போர் நிறுத்தம் நீட்டித்த நிலையில், அப்போது ஹமாஸ் பல பிணையக் கைதிகளை விடுவித்தது. அதேபோல இஸ்ரேல் வசம் இருந்த பல பாலஸ்தீன கைதிகளையும் ஹமாஸ் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Previous Story

தேர்தலும் வட்வரியும்

Next Story

வாராந்த அரசியல்