ஹக்கீம்-ராஜாக்கள் உரிமைப் போர்!

-நஜீப்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முப்பதாவது தேசிய மாநாடு இந்த முறை புத்தளம் – பாயிஷ் ஞாபகார்த்த மண்டபத்தில் தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. அப்போது மட்டக்களப்பில் இருந்து வந்த பலருக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் மு.கா. சின்னத்தில் பேரினக் கட்சிகளுடன் போட்டி போட்டு ஜெயித்த எங்களுக்கு மாநாட்டுக்குள் பிரவேசிக்க தடை செய்திருப்பது என்ன ஜனநாயகம்-கொடுமை என்று அவர்கள் மண்டபத்துக்கு வெளியே ரகலை பண்ணிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

தலைவருடைய கையாட்கள் புத்தளம் வந்த எங்களை தாக்குவதற்கும் அடியாட்களை ஏற்பாடு செய்திருந்தனர் என்று அவர்கள் சாடிக் கொண்டிருந்தார்கள். இது முஸ்லிம் காங்கிரஸே அல்ல. ஹக்கீம் காங்கிரஸ் என்றும் அவர்கள் ஊடகங்கள் முன் செவ்விகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் குழப்ப நிலையில் தலைவர் சற்று தாமதமாக மண்டபத்துக்கு வருகை தந்ததாகவும் சொல்லப்படுகின்றது. காங்கிரசுக்குள் பல குழக்கள் இருப்பதும் அதில் ஹக்கீம் காங்கிரஸ்தான் இன்று பலமான குழு என்பததை நாம் நெடுநாளாக சுட்டிக் காட்டி வந்தோம்.

போராளிகளுக்கும் இது இப்போது புரிந்திருக்கின்றது. ஆனால் அங்கு உரிமைப் போர் நடாத்தியவர்களும் ராஜாக்களின்  கையாட்கள்  என்று கதைகள்.

நன்றி:13.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

வேற்றுக் கிரகவாசிகள் பூமிக்கு வந்தால் அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?

Default thumbnail
Next Story

படகேறி சிறைக்கு வரும் கூத்து!