-நஜீப் பின் கபூர்-
நாட்டின் கவனத்தை ஈர்த்த அகுரணை போராட்டம்!
கிழக்கு அரசியல் புரட்சிக்கு தூவப்பட்ட விதை இது!
2024 ஜனாதிபதித் தேர்தல் மேடையில் அகுரணையில் ஹக்கீமுக்கு நடந்த அவமானம் அரசியல் வட்டாரங்களில் ஒரு பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக எதிரும் புதிருமான பரப்புரைகள்-கதைகள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாயின. அரசியலில் இவை சகஜம் என்று சொல்வோரும் இருக்கின்றனர்.
இதன் யதார்த்த நிலை என்ன என்பது பற்றிய சில தகவல்களை களத்தில் இருந்தவர்கள் என்ற வகையில் இங்கு பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். மு.கா. தலைவருக்கு எதிர்ப்பைக் காட்டியவர்கள் அனைவரும் என்பிபி.-ஜேவிபி ஆதரவாலர்கள் என்ற கதை முற்றிலும் தவறானது. நமது பார்வையில் அவர்கள் தரப்பில் பலர் இருக்கின்றார்கள்.
1.கடந்த காலங்களில் அகுரணை வெள்ளப் பெருக்குகளின் போது தொடர்ச்சியாக ஹக்கீம் கொடுத்த போலிய வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்பட்ட ஊர் மக்கள்.
2அணுர பேச்சை திரிவு படுத்தி அதனை சஜித்துக்கு ஆதரவு பரப்புரையாக மாற்ற ஹக்கீம் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் கொதித்துப் போய் இருந்த என்பிபி. ஆதரவாலர்கள்.
3.எட்டாயிரம் வாக்குகளுக்கும் குறைவாக மு.கா. ஆதரவாலர்களை மட்டுமே கண்டி மாவட்டத்தில் வைத்திருக்கின்ற ஹக்கீம் பொதுத் தேர்தல் என்று வந்தால் ஐதேக (ரணில்)-ஐமச (சஜித்) வாக்குகளை நயவஞ்சகமாகக் கொள்ளையடித்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி கொள்வதால் அதிருப்தியில் இருக்கும் அந்தக் கட்சிகளின் ஆதரவாலர்கள்.
4.ஹக்கீம் மு.கா. தலைவராக இருந்து கொண்டு கண்டியை மையப்படுத்தி அரசியல் செய்வதால் அதனால் தமக்கு வாய்ப்பு இல்லை என்ற அதிருப்தியில் இருக்கின்ற மாற்றுக் கட்சி அரசியல்வாதிகளின் ஆதவாலர்கள். (அப்படியான ஒரு போஸ்டரும் பிரதேசத்தில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தது.)
5.பொதுவாக கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் ஹக்கீமின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக இருக்கும் கடுமையான அதிருப்திகள் என்பனதான் இந்த எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணங்கள்.
பொதுவாகப் பார்க்கின்ற போது மு.கா. தலைவர் ஹக்கீம் மீது கிழக்கில் கூட நல்லெண்ணம் கிடையாது. என்றாலும் அங்குள்ள பிரதேசவாதம் அவர் தலைமைக்கு நல்ல பாதுகாப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதனை நாம் தொடர்ச்சியாக தேசிய ஊடகங்களிலும் கூட பேசி வந்திருக்கின்றோம்.
மேலும் அவரது தலைமையை பாதுகாக்கும் வகையில் பிரதேச வாரியாக அவருக்கு ஒரு விசிரிகள் கூட்டம் இருக்கின்றது.சிந்தனை ரீதியில் அவர்கள் அரசியலில் சீரோக்கள். ஹக்கீமுக்கு அரசியல் அதிகாரங்கள் வருகின்றபோது பொருளாதார ரீதியில் இலாபங்களை பெற்றுப் பிழைக்கின்ற ஒரு கூட்டத்தினர்தான் இன்று மு.கா. அரசியல் உயர்பீடத்தில் இருக்கின்றார்கள்.
இதனால் ஹக்கீம் தலைமைக்கு உடனடியாக ஆபத்துகள் இல்லை. மற்றும் கிழக்கில் ஹக்கீமின் பிரித்தாலும் கொள்கையும் நல்ல உத்தியாக இருக்கின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மு.கா.வில் சிறப்பு அரசியல் உச்சபீடம் என்ற ஒன்று இருக்கின்றது. இதில் அவரது இரத்த உறவுகள் மூன்று பேர்தான். அவர்கள்தான் அனைத்துத் தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.
அவர்கள் கூடி எடுக்கின்ற முடிவுகள்தான் மு.கா. முடிவுகளாக நிறைவேறும் வகையில் செயல்பாடுகள் அங்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இது மு.கா.வில் எத்தனை பேருக்குத் தெரியும்.?
அது எப்படி இருந்தலும் 2024 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஹக்கீமுக்கு எதிரான காட்சிக்குள் இன்று நடப்பது கிளர்ச்சியா புரட்சியின் துவக்கமா என்பதனை தீர்மானிக்கும்.
எது எப்படி இருந்தாலும் அக்குரணையில் நடந்த சம்பவம் முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக கிழக்கில் ஹக்கீமின் தலைமை தொடர்பான ஒரு அவதானத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால் தலைவிதியை கிழக்குதான் தீர்மானிக்க வேண்டும்.