ஹக்கீமின் குட்டி ஆசை!

-நஜீப்-

அண்மையில் மு.கா. தலைவர் ஹக்கீமிடன் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்ப்பில் தங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்க, அதற்கு இன்னும் நிறைக் காலம் இருக்கின்றது. இப்போது அது பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்றும் முதலில் பொதுத் தேர்தல்தான் நடத்த வேண்டும் என்றும் அங்கு கருத்துச் சொல்லி இருந்தார்.

அப்படியாக இருந்தால் ரணிலை அதிகாரத்தில் வைத்து நிகழ்ச்சி நிரலுக்கு மாற்றமாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்…! ரணில் தொடர்ந்தும்  அதிகார கதிரையில் அமர வேண்டும் இது ஹக்கீம் அரசியல் ஆசை. நமது பார்வையில், ஏன் அப்படி என்றால், சமகால அரசியலில் ஜனாதிபதி தேர்தல் பெறுபேருகள் ஹக்கீமுக்கு கசப்பாக இருக்கும். அரசியல் வியாபாரத்துக்கு  உதவது..!

அதனால் பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டிப் போனால் வழக்கம் போல சஜித்-ரணில் அணிகளுடன் கூட்டணி போட்டு காய் பறிக்கலாம் என்பதுதான் அவரது இந்த சின்ன ஆசைக்குக் காரணமாக இருக்கலாம். தேர்தல் முடிவுகளின் பின்னர் சில உறுப்பினர்களை பெற்றுக் கொண்டு அதில் ஏதாவது பிழைத்துக் கொள்ளும் திட்டமாகவும் இது இருக்கக் கூடும்.

Hakeem's Hypocrisy – Q&A | ThinkWorth

கடந்த முறை ராஜபக்ஸாக்களை மேடைகளில் திட்டி வோட்டுச் சேர்த்து கரை சேர்ந்தவர்கள்  அடித்த அந்தர்  பல்டிக்கு இன்று வரை தலைவர் பிரம்பை கையில் எடுக்காமல் இருப்பதும் அவரது அரசியல் வியாபார உத்தியாகத்தான் இருக்க வேண்டும்.

நன்றி: 17.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உலகின் பெரும் சோம்பேறி யார்!

Next Story

அஸ்வெஸ்ம வெற்றி பெறாது!