“ஸ்டுடியோவுக்கு வாங்க..” அன்பு அழைப்பு ஏ.ஆர்.ரகுமான்.. தட்டாமல் சென்ற ஸ்டாலின்.

சர்வதேச முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள ஏ.ஆர். ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார்.  தமிழ்நாட்டிற்குச் சர்வதேச முதலீடுகள் ஈர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாகத் துபாய் சென்றுள்ளார்.

துபாயில் இப்போது நடைபெற்று வரும் உலக எக்ஸ்போ கண்காட்சியில் இன்று (மார்ச் 25) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது. துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில்.. தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் துபாய் எக்ஸ்போ இந்த எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த அரங்கில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டிற்கான அனைத்து சிறப்புகளையும் இந்த ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்தியேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் அதேபோல துபாயில் உள்ள ஐக்கிய அமீரகத்தின் முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். முன்னதாக இன்றைய தினம் ஐக்கிய அமீரகத்தின் அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக உள்ள சூழ்நிலை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விவரித்தார். ஏ.ஆர்,ரகுமான் இதற்கிடையே துபாய் எக்ஸ்போவில் சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரகுமான் துபாயில் தங்கியுள்ளார். இதனிடையே துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை இன்று ஏ.ஆர். ரகுமான் சந்தித்தார். மேலும், அங்குள்ள தனது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

ரகுமான் ஸ்டுடியோவில் முதல்வர் ஸ்டாலின் ஏ.ஆர். ரகுமானின் இந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார். அப்போது ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கும் “மூப்பில்லா தமிழே… தாயே” என்ற ஆல்பம் பாடலை முதலமைச்சருக்குப் போட்டுக் காட்டினார். இதை முதல்வர் ஸ்டாலின் கேட்டு ரசித்தார். முதல்வர் ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் இருக்கும் படங்களும் வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Previous Story

யுக்ரேன் மீது ஹைபர்சோனிக் ஏவுகணையை செலுத்திய ரஷ்யா

Next Story

உடனடி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! - கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தையில் ஜனாதிபதி இணக்கம்!