‘ஷாஹீனை நீக்க கோரும் மாமனார் ஷாஹித் அஃப்ரிடி’ 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எந்தப் போட்டியில் இந்தியாவிடம் தோற்றாலும், அது பாகிஸ்தானுக்கு ஒரு புதிய காயமாக உருவாகிறது. ஆனால் உண்மையில் ஒவ்வொரு புதிய தோல்வியும் பழைய காயங்களை மீண்டும் கிளறுகிறது.

டி20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, இந்தத் தோல்விப் பயணம் எட்டு போட்டிகளாக நீண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் 13 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

டி20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, இந்தத் தோல்விப் பயணம் எட்டு போட்டிகளாக நீண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தனது மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரில் ஆல்-அவுட் ஆகி, 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணியின் செயல்பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

விளையாட்டில் வெற்றி தோல்விகள் சகஜம் என்றாலும், பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோற்கும் விதம், இரு அணிகளுக்கும் இடையே இப்போது ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

சர்வதேச தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும் இருப்பது மட்டுமல்லாமல், இரு அணிகளின் மன முதிர்ச்சி மற்றும் மன உறுதியிலும் பெரும் வித்தியாசம் உள்ளது.

கடினமான சூழ்நிலைகளில் தைரியத்தைத் தக்க வைப்பதற்கும், நம்பிக்கையை இழப்பதற்கும் இடையிலான வேறுபாடு கொழும்பில் நடந்த இந்தப் போட்டியில் தெளிவாகத் தெரிந்தது.

விளையாட்டில் வெற்றி தோல்விகள் சகஜம் என்றாலும், பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோற்கும் விதம், இரு அணிகளுக்கும் இடையே இப்போது ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஐ.சி.சி போட்டியில் இந்தியா மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தோற்கடித்துள்ளது.

சமீப காலமாக பாகிஸ்தானின் செயல்பாட்டைப் பார்க்கும்போது, அணிக்குச் சுமையாக மாறி வரும் வீரர்களை நீக்காமல் எதையும் சாதிக்க முடியாது என்று தோன்றுகிறது.

குறிப்பாக சர்வதேச டி20 போட்டிகளில் பெரிய அணிகளுக்கு எதிராகத் திருப்தியற்ற செயல்பாட்டை வெளிப்படுத்தியும், நீண்ட காலமாக அணியில் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் வீரர்களின் பெயர்களை நான் மட்டுமல்ல, இந்த உலகமே அறியும்.

ஷாஹீன் ஷா அப்ரிடி

ஷாஹீன் ஷா அஃப்ரிடி குறித்து எழும் விமர்சனங்கள்

முதலில் ஷாஹீன் ஷா அஃப்ரிடியின் பெயர் நினைவுக்கு வருகிறது. அவர் சில விளம்பரங்களில் தோன்றி, தான் பாகிஸ்தானின் முதன்மையான வேகப்பந்து வீச்சாளர் என காட்டிக்கொண்டார். ஆனால் அவரது சமீபத்திய ஃபார்ம் இந்தக் கூற்றைத் தவறு என்று நிரூபித்து வருகிறது.

சிறிது காலத்திற்கு முன்பு வரை ஷாஹீன் ஷா அஃப்ரிடி, எந்தவொரு பேட்டிங் வரிசைக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

உடல் தகுதிப் பிரச்னைகளால் ஷாஹீன் தனது செயல்திறனை இழந்துள்ளார். மேலும் அவரது பந்துவீச்சு வேகமும் குறைந்துள்ளது. முன்பு போல பந்தை ஸ்விங் செய்யும் திறனும் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த முக்கியமான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஷாஹீனின் ஏமாற்றமளிக்கும் செயல்பாட்டிற்குப் பிறகு, அவரது மாமனார் ஷாஹித் அஃப்ரிடியும், நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் மற்றும் ஷதாப் கான் ஆகியோருடன் ஷாஹீனையும் நீக்கிவிட்டு, அடுத்துள்ள வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்.

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப்பும் ஷாஹீன், பாபர் மற்றும் ஷதாப்பின் காலம் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்.

பாபர் அசாம்

பாபர் அசாம்
பாபர் அசாம்

காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு வீரரும் கடினமான காலங்களை எதிர்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கிறார்கள்.

பாபர் அசாம் தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார். ஆனால் அவர் டி20 போட்டிகளில் கடினமான நேரத்தை எதிர்கொள்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

கடந்த காலத்தில் டி20 போட்டிகளில் பாபர் மிகச்சிறப்பாக செயல்பட்டார் என்பதிலும், தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் அவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போது டி20 கிரிக்கெட் முன்னேறி வரும் வேகம் மற்றும் புதிய பாணிகளை ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது, பாபர் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

முன்னதாக, அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வெற்றிகரமாக இருந்தார்.

ஆனால் அப்போதும் அவர் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யவில்லை என்று விமர்சிக்கப்பட்டார் மற்றும் அவரது ‘ஸ்டிரைக் ரேட்’ குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டன.

அந்தக் காலத்தில், பாகிஸ்தான் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். அதாவது ‘பாபரும் ரிஸ்வானும் நிச்சயமாக ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ தருகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் 15-16வது ஓவரில் ஆட்டமிழக்கும்போது, நடுத்தர வரிசை பேட்ஸ்மேன்கள் விளையாட அங்கு என்ன இருக்கிறது?’ என்பதுதான்.

சர்வதேச டி20 போட்டிகளில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி மொத்தம் 10 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பை தந்துள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். இப்போது பாபரின் பேட்டிங் வரிசை மாறியுள்ள நிலையில், அவரது பாணி புதிய இடத்திற்குப் பொருந்தவில்லை.

இதற்கு, அவர் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் வந்து அதிரடி பேட்டிங் செய்வது அவசியம். ஆனால் அவர் நிலை பெற சிறிது நேரம் எடுத்துக் கொள்வதால், இந்த மாற்றத்திற்கு அவரால் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

பாபர் சுழற்பந்து வீச்சாளர்களிடம் எளிதில் ஆட்டமிழக்கிறார். இந்தப் பிரச்னை பாபரிடம் எப்போதும் இருந்துள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பார்த்தது போல, அப்பிரச்னை காலப்போக்கில் மோசமடைந்துள்ளது.

புள்ளிவிவரங்களைப் பார்த்தால், சர்வதேச டி20 போட்டிகளில் பாபர் 25 முறை சுழற்பந்து வீச்சாளர்களால் ஆட்டமிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா அவரை அதிகபட்சமாக (ஐந்து முறை) ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதே சமயம் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் அடில் ரஷித் தலா நான்கு முறை அவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். இஷ் சோதி மூன்று முறை அவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

பாபர் நான்கு டி20 உலகக் கோப்பைகளில் 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் ஐந்து அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.

சைமின் சுழற்பந்து வீச்சு அணிக்கு பலனளித்தாலும், ஒரு தொடக்க ஆட்டக்காரராக, அவ்வப்போது சிறப்பாகவும் ,அவ்வப்போது மோசமாகவும் உள்ள அவரது செயல்பாடு அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘பெரிய தேர்வில் தோல்வியடைந்த ஷாதாப்’

இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் பல வீரர்களின் மோசமான செயல்பாடு குறித்து விவாதங்கள் நடந்தாலும், ஒரு மூத்த வீரராக ஷதாப் கான் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

உடல் தகுதியின்மை காரணமாக ஷதாப் சிறிது காலம் அணியில் இடம் பெறவில்லை. ஆனால் அவர் திரும்பிய பிறகு, ஒரு ஆல் ரவுண்டராகவும் லெக்-ஸ்பின்னராகவும் அவர் அணியின் வெற்றிக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கைக்கு எதிரான தம்புல்லா டி20 போட்டியில் ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். அதேபோல் அமெரிக்காவுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிரான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஷதாப் கான் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டார்.

மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமைக்காக ஷதாப் கான் மற்றும் அப்ரார் அகமது இருவரும் முக்கியமான பந்துவீச்சாளர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்ரார் அகமது இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் ஏமாற்றமளித்தார். அனைவரும் அவரது “மிஸ்டரி பந்துவீச்சை” ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், சைம் அய்யூப்பை ஒரு ஆல்ரவுண்டராக உயர்த்தியுள்ளார், ஆனால் அனைவரும் அவரை ஒரு தொடக்க ஆட்டக்காரராகவே பார்க்கின்றனர்.

சைமின் சுழற்பந்து வீச்சு அணிக்கு பலனளித்தாலும், ஒரு தொடக்க ஆட்டக்காரராக அவ்வப்போது சிறப்பாகவும் அவ்வப்போது மோசமாகவும் உள்ள அவரது செயல்பாடு அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.

சைம் அய்யூப் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்தார். அதேசமயம் இந்த உலகக் கோப்பையில் அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் வெறும் 24 மட்டுமே. அதேபோல், அவர் தனது கடைசி 15 இன்னிங்ஸ்களில் இரண்டு அரை சதங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

‘திறமையை வீணாக்காதீர்கள்’

சுஃபியான் முகீம், சல்மான் மிர்சா, மாஸ் சதகாத், ஷமிம் ஹுசைன் மற்றும் பல நல்ல வீரர்கள் தங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஷாஹீன் அஃப்ரிடி, பாபர் அசாம் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா நான்கு டி20 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளனர். அடுத்த உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, இந்த மூவரையும் இனி இந்த வடிவத்தில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

பாகிஸ்தானில் திறமையான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு பஞ்சமில்லை, சரியான நேரத்தில் அவர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் அவர்களின் திறமைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சுஃபியான் முகீம், சல்மான் மிர்சா, மாஸ் சதகாத், ஷமிம் ஹுசைன் மற்றும் பல நல்ல வீரர்கள் தங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களின் காலம் முடிவதற்குள் இந்தத் திறமையான வீரர்களை களமிறக்க வேண்டும்.

ஏனென்றால், பிரபலமான வீரர்களை ஏற்கனவே நிறைய பார்த்துவிட்டோம்.

Previous Story

ටිල්වින් සහෝදරයාටත් සාටකයක් !

Next Story

බොරු තීන්දු දුන් ඩබලක් එක තැන වැඩ ! ලුහුබැඳ ආ යතුරුපැදි ගැන සුවිශේෂී අනාවරණයක්