ஷாருக் கான்: வில்லனாக அறிமுகமாகி   சூப்பர் ஸ்டார் ஆன கதை

‘தீவானா’ என்னும் திரைப்படத்தின் மூலம், 1992ஆம் ஆண்டு, ஷாருக் கான் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். அவரது நடிப்பு, இந்திய சினிமா ரசிர்களை நிச்சயமாக கவரக்கூடிய ஒரு நம்பிக்கைக்குரிய நட்சத்திரம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

ஷாருக் கான்: வில்லனாக அறிமுகமான இளைஞர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன கதை
தீவானா’ திரைப்படத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாத உற்சாகம் மிக்க இளைஞராக வலம்வந்த ராஜா (ஷாருக்) மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

‘தீவானா’ திரைப்படத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாத உற்சாகம் மிக்க இளைஞராக வலம்வந்த ராஜா (ஷாருக்) மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

கடந்த 1993இல் ஷாருக்கின் ‘பாஸிகர்’ (Baazigar), ‘தர்’ (Darr) ஆகிய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியானபோது பாக்ஸ் ஆபிஸில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று ஷாருக் `ரொமான்ஸ் மன்னன்’ என்று அழைக்கப்பட்டாலும் சினிமாவில் அவர் வெற்றியின் முதல் படிகளில் ஏறியது `காதல்’ மூலம் அல்ல. அவர் ஒரு வில்லனாகவே தனது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான பாஸிகர் படத்தில் வில்லனாக நடிக்கத் தொடங்கிய அவரது பயணம் 2023இல் வெளியான ‘ஜவான்’ வரை நீண்டது.

அதாவது 30 வருட இடைவெளியில் இரண்டு வகையான வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.

`காதல் நாயகன்’

ஷாருக் கான்: வில்லனாக அறிமுகமான இளைஞர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன கதை

மூத்த திரைப்பட பத்திரிக்கையாளர் நம்ரதா ஜோஷி கூறுகையில், ​​”பாஸிகர்’ மற்றும் ‘தர்’ படங்களில் ஷாருக் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தபோதிலும், அதில் இருந்த காதல் காட்சிகள் மக்களை ஈர்த்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எதிர்மறையான கேரக்டர்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு, மிகவும் சாதுவான, இயல்பான, காதல் நாயகனாகத் தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டார்” என்றார்.

கடந்த சில வருடங்களாக வெவ்வேறு கதாபாத்திரங்களில் அவர் நடிக்கத் தொடங்கியபோது, ​​அவரது படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார் நம்ரதா.

கடந்த 2023ஆம் ஆண்டில் ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ மூலம் அவர் தனது கதாபாத்திரங்களில் புதுமையைக் காட்டினார். ஹிந்தி சினிமாவுக்கு இது புதிது. ஜவான் படத்தில் அதிகாரத்திற்கு எதிராக ஷாருக் வெளிப்படையாக சவால் விடுவார். இதுபோன்ற காட்சிகள் இங்கு புதிது.

பாஸிகர் படத்தில் காதலுக்காக வில்லன் ஆவார். ‘ஜவானில்’ ஒட்டுமொத்த அரசு அமைப்புக்கு எதிராக வில்லனாக மாறுவார். இரண்டிற்கும் இடையே ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளதாகக் கூறும் நம்ரதா, இது ஷாருக்கின் தனித்துவமான திரைப் பயணத்தைக் காட்டுவதாகக் கூறுகிறார்.

அப்பாஸ்-மஸ்தானின் ‘பாஸிகர்’ திரைப்படம் 30 ஆண்டுகளுக்கு முன்பு 13 நவம்பர் 1993இல் வெளியானது. ஒரு சில சீரியல்கள் மற்றும் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த ஒரு புதுமுக நாயகன், அடுத்தடுத்து கொலைகளைச் செய்யும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஷாருக் அதைச் செய்தார்.

ஷாருக் கான்: வில்லனாக அறிமுகமான இளைஞர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன கதை

‘பாஸிகர்’ படத்தின் தொடக்கத்தில் ஷாருக்கிற்கும் ஷில்பா ஷெட்டிக்கும் இடையே இரண்டு காதல் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பின்னர் இருவரும் திருமணத்திற்காக நீதிமன்றத்தை நாடுவார்கள். திடீரென்று ஷாருக், ஷில்பா ஷெட்டியை மிகக் கொடூரமாக ஓர் உயரமான கட்டடத்தில் இருந்து கீழே தள்ளிப் படுகொலை செய்வார்.

காதல் காட்சிகளுக்கு நடுவில் திடீரென வந்த இந்தக் காட்சி, படம் பார்க்கும் பார்வையாளர்களைத் திகைக்க வைத்தது. அந்தக் காலகட்டத்தில் இது புதுமையான கதைகளமாகப் பார்க்கப்பட்டது.

அந்த நேரத்தில், சல்மான் கான் ‘மேன் பியார் கியா’ படத்தில் காதலுக்காகப் பல சோதனைகளைக் கடந்து செல்லும் நாயகராகத் தோன்றினார். ​​’கயாமத் சே கயாமத் தக்’ படத்தில் அமீர் காதலுக்காக இறக்கத் தயாராக இருக்கும் ஒரு நாயகன் கதாபாத்திரத்தில் தோன்றினார். ஆனால், ​​அஜய் சர்மா என்ற விக்கி மல்ஹோத்ரா (ஷாருக்) பாலிவுட் நாயகர்களின் வழக்கமான பிம்பத்தை உடைத்தார். பாஸிகரில் கொடூர வில்லனாக தோன்றினார்.

வழக்கங்களை உடைத்த ஷாருக்

ஷாருக் கான்: வில்லனாக அறிமுகமான இளைஞர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன கதை

திரைப்பட வரலாற்றாசிரியர் அம்ரித் கங்கர் கூறுகையில், ​​”ஷாருக் மணி கவுலின் ஆஃப்-பீட் படமான ‘அஹமக்’ மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். ‘மாயா மேம் சாஹேப்’ போன்ற சில படங்களில் நடித்தார். ‘சர்க்கஸ்’ சீரியலில் நடித்தார். ஆனால், ‘பாஸிகர்’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது” என்றார்.

ஷாருக்கானின் நடிப்புத் திறமைக்கு இதுவொரு சான்று என்கிறார் அவர்.

“அவர் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். முன்னர் பாலிவுட் நடிகர்களைத் தேர்வு செய்வதில் சில `ஸ்டீரியோடைப்கள்’ காணப்பட்டன. அந்த வழக்கங்களை ஷாருக்கின் திறமை உடைத்தது.”

“தர்’ படத்தில்கூட, யஷ் சோப்ரா அவருக்கு எதிர்மறையான பாத்திரத்தை வழங்கினார். இதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது நாயகன் என்ற பிம்பத்தைப் பாதிக்கும் எனக் கருதப்பட்டது.”

‘பாஸிகர்’ கதாபாத்திரம் மிகவும் எதிர்மறையாக இருந்ததால் பல பெரிய நாயகர்கள் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். பாலிவுட் துறையில் புதிய முகமாக இருந்தாலும், இந்த ரிஸ்க்கை எடுக்க தைரியம் காட்டிய ஒரே ஹீரோ ஷாருக் மட்டும் தான்.

‘பாஸிகர்’ படத்திற்குப் பிறகு, யஷ் சோப்ராவின் ‘தர்’ திரைப்படம் 24 டிசம்பர் 1993 அன்று வெளியானது. இதில் ஷாருக் கான் மனநிலை சரியில்லாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு தலைக் காதல் அவரைத் தீய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. ‘தர்’ படத்தின் நாயகன் ராகுல் ஒரு வேட்டைக்காரரைப் போலச் செயல்படுவார்.ஷாருக் கான்: வில்லனாக அறிமுகமான இளைஞர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன கதை

யஷ் சோப்ரா ‘தர்’ படத்தில் ஷாருக் நடித்த வேடத்திற்கு முதலில் ரிஷி கபூரை தான் அணுகினார். ரிஷி கபூர் தனது சுயசரிதையான ‘குல்லம் குல்லா’வில் இதுபற்றி எழுதியிருக்கிறார்.

“யஷ் சோப்ரா என்னிடம் அந்தப் பாத்திரத்தில் நடிக்கச் சொன்னபோது, ​​வில்லன் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது என்று அவரிடம் சொன்னேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் உங்களுடன் `சாந்தினி’ (இதுவொரு காதல் படம்) என்னும் திரைப்படத்தைக் கொடுத்தேன். `கோஜ்’ படத்தில் நான் நெகட்டிவ் ரோலில் நடித்தேன், அது தோல்வியடைந்தது. நீங்கள் இந்தப் படத்திற்கு ஷாருக்கை அணுகலாம். நான் அவருடன் பணிபுரிந்துள்ளேன், அவர் திறமையான, புத்திசாலியான இளைஞர்” என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் படம் அமீர் கான் மற்றும் அஜய் தேவ்கன் கைகளுக்குச் சென்றது. இருவரும் மறுத்து, கடைசியாக அந்தப் பாத்திரத்தை ஷாருக் ஏற்று நடித்தார்.

‘பாஸிகர்’ விக்கியாக இருந்தாலும் சரி, ‘தர்’ படத்தின் ராகுலாக இருந்தாலும் சரி, இரண்டு கதாபாத்திரங்களிலும் ஷாருக்கின் நடிப்பு உங்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்த இரண்டு படங்களிலும் முரண்பாடான ஒரு விஷயம் நிகழ்ந்தது. ரசிகர்கள் படத்தின் ஹீரோவை (சன்னி தியோல்) காட்டிலும், ஷாருக்கின் நடிப்பால் ஈர்க்கப்பட்டனர்.

இதற்கான பாராட்டுகள் திரைக்கதை எழுதியவருக்கோ அல்லது இயக்குநருக்கோ தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் மக்கள் திரையில் பார்த்த ஷாருக்கை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறார்கள்.

90களில் நிகழ்ந்த மாற்றம்

ஷாருக் கான்: வில்லனாக அறிமுகமான இளைஞர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன கதை

அம்ரித் கங்கர் 1990களில் தான் பெரிய மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார்.

“அந்தப் பத்து ஆண்டுகளில் மக்கள் ஷாருக்கின் ஆளுமையை உணர்ந்தனர். ஷாருக்கின் இந்த எதிர்மறை பாத்திரங்களில் காதல் உணர்வுகளும் இருந்தது” என்கிறார் அவர்.

“இந்தக் கதாபாத்திரங்களில் இளைஞர்கள் விரும்பும் ஒருவித புதுமை இருந்தது. உதாரணத்திற்கு, ஹிந்தி படங்களில் இல்லாத ஓர் உணர்ச்சியை ‘தர்’ சித்தரித்தது. திரையில் ஷாருக்கானின் சிறுவயது வசீகரம் ஒருவித வித்தியாசமான ஈர்ப்பை ஏற்படுத்தியது.”

`தர்’ படத்தில் அமைதியான ராகுல் (ஷாருக்) நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துபோன தனது தாயுடன் தொலைபேசியில் பேசும் காட்சிகளில் நெகிழ வைப்பார். ​​​​கிரண் என்று தனது மார்பில் கத்தியால் எழுதும் காட்சி ஒருவித வலியை ஏற்படுத்தும். ஜூஹி சாவ்லாவின் வருங்கால கணவர் சன்னி தியோல் மாறுவேடத்தில் இருந்த ஷாருக்கை பார்த்து ஓடும் காட்சியை யாராலும் மறக்க முடியாது.

கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் அந்தக் காட்சி நீடிக்கும், சன்னி தியோல் தான் ஹீரோ என்றாலும், ரசிகர்கள் ​​ஷாருக்கின் பக்கம் நிற்கிறார்கள்.

இந்தக் கதாபாத்திரத்தை தவறான சித்தரிப்பு என்று பலர் விமர்சித்தாலும், ஷாருக், இந்த இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கினார்.

`கிங் கான்’ ஆன ஷாருக்கான்

ஷாருக் கான்: வில்லனாக அறிமுகமான இளைஞர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன கதை
கடந்த 2023ஆம் ஆண்டில் பதான் மற்றும் ஜவான் மூலம் அவர் தனது கதாபாத்திரங்களில் புதுமையைக் காட்டினார்

‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘தில் தோ பாகல் ஹை’, ‘குச் குச் ஹோதா ஹை’ என எல்லா படங்களும் அடுத்தடுத்து வெளியாகி ஷாருக் கானை ‘கிங் கான்’ ஆக மாற்றியது. அதே நேரம் ஷாருக் கானின் வில்லத்தனமான கேரக்டர்கள்தான் அவரின் வெற்றிக்கான களத்தைத் தயார் செய்தன.

சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த அவரின் பாதையில் பூக்கள் மட்டும் இல்லை, முற்களும் இருந்தன. ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்தன. சூப்பர் ஸ்டார் இமேஜை விட்டு விலகி சாதாரண இயல்பான கதாபாத்திரங்களில் அவர் நடிக்கவில்லை என்று பலர் அவரை விமர்சித்தனர். இதற்கிடையில் அவர் அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடித்தார். பின்னர் ஷாருக்கின் நாட்கள் முடிந்துவிட்டன என்று மக்கள் நினைக்க ஆரம்பித்தனர். அவர் ஹீரோ இமேஜில் இருந்து பூஜ்ஜியத்திற்கு இறங்கினார்.

பல வருடங்களாக ஷாருக்கை வெள்ளித்திரையில் காண முடியவில்லை. ஆனால் டிவியில் சில விளம்பரங்களில் நடித்தார். இதற்கிடையில், அவரது கருத்துகளால் அரசியல் சலசலப்பு ஏற்பட்டது. அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்டார். ஷாருக் முற்றிலும் அமைதியாக இருந்தார்.

கடந்த 2023இல், ஷாருக் தனக்கே உரிய பாணியில் ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ படங்களில் தன்னை மீண்டும் நிரூபித்தார். “மகனை சீண்டுவதற்கு முன் அப்பாவிடம் பேசு’’ என்ற டயலாக் மூலம் அவரின் அமைதியைக் கலைத்தார். ஜவானில் அவரின் வசனங்கள் மூலம் ரசிகர்கள் அவரின் அரசியல் மற்றும் பிற பிரச்னைகளில் அவரின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டனர்.

‘பாஸிகர்’ மற்றும் ‘தர்’ போலவே, ‘ஜவானின் ஆசாத் ரத்தோரும் ஒரு வகையான வில்லன்தான். ஆனால் 90களின் ஆன்டி-ஹீரோக்களில் இருந்து வித்தியாசமானவர். ஆசாத் ரத்தோர், சமூகத்தில் பரவி வரும் ஊழலுக்கு ஒரு கண்காணிப்புக் குழு மூலம் சவால் விடுகிறார். அவர் சட்டத்தைக் கையில் எடுக்கிறார். அரசாங்கத்தின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இம்முறை ஒரு வில்லனாக ஷாருக், மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறார்.

இருப்பினும், நம்ரதா ஜோஷி, “ஜவான் வெற்றியடைந்துள்ளது, ஆனால் அது ஒரு படமாக சமூகத்துக்குப் பயனளிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இது ஒரு ஆண் ஆதிக்கம் செலுத்தும் படம். ‘சக் தே இந்தியா’ போன்ற ஒரு படத்தில் ஷாருக் நடிப்பதை நான் விரும்புகிறேன். ஜவானில் பாலின சமத்துவத்தைக் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் அது பலனளிக்கவில்லை” என்று விமர்சித்தார்.

‘பாஸிகர்’ உருவான கதை

ஷாருக் கான்: வில்லனாக அறிமுகமான இளைஞர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன கதை

பாஸிகர் படத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்து, படப்பிடிப்பு டிசம்பர் 1992இல் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு பம்பாய் (மும்பை) கலவரம் ஏற்பட்டது. எனவே படப்பிடிப்பு பல மாதங்களுக்குப் பிறகுதான் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்தப் படத்திற்காக ஸ்ரீதேவி, மாதுரி உள்ளிட்ட பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவி இரு சகோதரிகளில் ஒருவராக நடிக்க விரும்பினார். ஆனால் ஷாருக்கான் போன்ற புதுமுக நடிகரால், ஸ்ரீதேவி போன்ற பெரிய கதாநாயகி கொல்லப்படுவதை பார்வையாளர்கள் விரும்ப மாட்டார்கள் என்று இயக்குநர்கள் கருதினர்.

இப்படத்தில் மதன் சோப்ராவாக தலிப் தஹில் நடித்திருந்தார். இவரைப் பழிவாங்கத்தான் ஷாருக் கான் விக்கியாக அதாவது பாஸிகராக மாறுவார்.

சமீபத்தில், ‘தி அன்ட்ரைட்கர்’ என்ற போட்காஸ்டில், தலிப் தஹில் பேசுகையில், “நான் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்தேன். அப்போது ஒரு பெண் என்னிடம் வந்து ‘பாஸிகர்’ படத்தில் ஷாருக் கானை ஏன் அப்படி அடித்தீர்கள் என்று கேட்டார். அந்தப் பெண் ஷாருக்கின் தீவிர ரசிகையாக இருந்தார்” என்றார்.

‘பாஸிகர்’, ‘தர்’ படங்களில் ஒரு கொலையாளியையும், ஹீரோவுக்கு எதிரான கதாபாத்திரங்களையும் ஓரளவுக்கு மனிதர்களாக்கியதே ஷாருக்கின் சாதனை.

இதற்கிடையில், ஷாருக் ராஜா என்ற பிரபல கதாபாத்திரத்திலும் தோன்றினார். இந்திய அணியின் பயிற்சியாளராக கபீர் கான் ஆனார். ‘ஸ்வதேஷ்’ படத்தில் இந்தியா திரும்பிய இந்தியராக நடித்தார். ‘பஹேலி’யில் கிஷன்லால் ஆக அசத்தினார்.

`யெஸ் பாஸ்’ படத்தில் நட்சத்திரங்களையும் சந்திரனையும் வீழ்த்த விரும்பும் ராகுலாகவும் தோன்றினார். மேலும், ‘ஹே ராம்’ படத்தின் அம்ஜத் அலி கான் மற்றும் ஜீரோவின் பாவா சிங் என அவரின் வித்தியாசமான கதாபாத்திரங்களின் பட்டியல் நீள்கிறது.

இவற்றில் தங்களுக்கு மிகவும் விருப்பமான ஷாருக்கை, சிலர் ஹீரோ கதாபாத்திரங்களிலும், சிலர் வில்லன் கதாபாத்திரங்களிலும் கண்டுகொண்டார்கள்.

Previous Story

காஸா போர்: பாலத்தீன மக்கள் எதிர்பார்க்கும் ஆதரவை அரபு நாடுகள் வழங்காதது ஏன்? 

Next Story

அமெரிக்காவில் திக்...திக்... தேர்தல்; சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வரும்!