வோட்டுப் போட வர வேண்டாம்!

-நஜீப்-

news

இந்த நாட்டில் இருக்கின்ற ஒரு நாற்பது இலட்சம் பேர் அளவில் பல்வேறு காரணங்களினால் இன்று வெளிநாடுகளில் தங்கி இருக்கின்றனர். நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருக்கின்ற இந்த நாட்களில் இவர்களில் பெரும் தொகையானவர்கள் தேர்தல் ஜூரம் காரணமாக இங்கு வர இருப்பதாக முன் கூட்டி அறிவித்திருக்கின்றார்கள்.

news

இப்படி பல இலட்சம் பேர் நாட்டுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இப்படி வருகின்றவர்களில் தொன்னூறு சதவீதம் அணுரவுக்கு தேர்தல் பணிபுரியவும் வாக்களிக்கவும் வருகின்றார்கள் என்று செய்திகள் வருவதால் அவர்களை வாக்களிக்க நாட்டுக்கு வரக் கூடாது என்று ராஜீத சேனரத்தன எச்சரிக்கின்ற பாணியில் கூறி இருக்கின்றார்.

Rajitha Makes Damning Statement Against ...

அணுர தரப்பு கணக்குப்படி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வரலாம் என்று கூறப்படுகின்றது. அதனை அரைவாசியாகக் குறைத்து கணக்குப் பார்த்தாலும் ஒரு ஐந்து இலட்சம் பேர் என்று அமையலாம். அது கூட கணிசமான ஒரு தொகைதான்.

நூற்றுக்கணக்கான விமானங்கள் ஏற்கெணவே பதிவு செய்யப்பட்டிருப்பதாவும் தகவல்கள் வருகின்றன.

நன்றி: 01.09.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

'பெருமனதுடன் மன்னிக்கவும்'

Next Story

25 ஆண்டுகளில் 250 கோடி பேருக்கு காது கேளாமல் போகக்கூடும் - WHO