கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட பிரபல டியூசன் ஆசிரியர் வேலு குமார் 62556 வாக்குகளைப் பெற்று ஆறாம் இடத்தில் தெரிவானவர். அவர் பற்றி மக்கள் நல்லெண்ணம் இருப்பது போல் தெரிகின்றது. என்றாலும் இந்த முறை அவர் சற்று நெருக்கடிக்கு இலக்காகி இருக்கின்றார் என்று தெரிகின்றது.
ஆளும் தரப்பில் வேட்பாளர் ஜூனியர் அருள்சாமி, வேலுகுமாரின் வெற்றியைத் தட்டி விடவும் வாய்ப்பிருக்கின்றது. எப்படியோ மலையகச் சமூகம் கண்டி மாவட்டத்தில் ஆளும் தரப்பிலோ அல்லது எதிர்த் தரப்பிலோ தமது பிரதி நிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வது ஆரோக்கியமாக இருக்கும். என்று நாம் கருதுகின்றோம