வேட்பாளர்களிடம் பொலிஸ் அறிக்கை.. நாமலின் அதிரடி முடிவு!

எதிர்வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா இல்லையா என்பதைக் கண்டறியவே இந்த நடைமுறை என அவர் விளக்கியுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வேட்புமனுக்களை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பது குறித்து ஒரு கட்சியாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வலுவான அரசியல் கட்சி

மேலும், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேட்பாளர்களிடம் பொலிஸ் அறிக்கை.. நாமலின் அதிரடி முடிவு! | Police Reports From Slpp Candidates

இதேவேளை, தேர்தல் திகதி இறுதி செய்யப்பட்ட பின்னர் தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்களிடம் பொலிஸ் அறிக்கை.. நாமலின் அதிரடி முடிவு! | Police Reports From Slpp Candidates

அத்துடன், நாங்கள் ஒரு வலுவான அரசியல் கட்சியாக எங்களை முன்னிறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Story

3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி

Next Story

அணுர திறமைசாலிதான் சிரால்!