வேடுவர் யுகத்துக்குப் போகும் தேசம்! விரைவில் 15 மணி நேர மின்வெட்டு!!

எதிர்வரும் நாட்களில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, அந்நிய கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் இதன்பொது சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் எரிபொருள் பைகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு முதலில் நாட்டில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

Next Story

நான் நிறைவேற்று அதிகாரமுள்ளவன் என்னை ஐந்து வருடங்களுக்கு அசைக்கு முடியாது நான் போகவும் மாட்டேன்!