-யூசுப் என் யூனுஸ்-
காலத்துக்குக்குக் காலம் போர் யுக்திகளும் தந்திரங்களும் தளபாடங்களும் மாறுவது வரலாறு பூராவும் நடந்து வந்திருக்கின்றது. இந்தத் தொடரில் தற்போது ஆளில்லாத போர் உபகரங்கள் குறிப்பாக ரோன்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.
இந்த ரோன்களை உற்பத்தி செய்வதில் தற்பேது ஈரானும் துருக்கியும் முன்னணியில் இருக்கின்றன. உக்ரைன் போரின் திருப்பமாக இது இன்று காணப்படுகின்றது. அத்துடன் உளவாளிகளைப் பாவித்து தனது எதிரி நாடுகளுக்குள்ளேயே தாக்குதல்கள் நடக்கின்ற முறையும் தற்போது சிறப்பாக நடந்து வருகின்றது.
இதில் முன்னணியில் இருக்கின்ற நாடு இஸ்ரோல். மொசாட் வழிநடத்திலில் இஸ்ரோல் மிகச் சிறப்பாக அந்த காரியத்தை செய்து வருகின்றது. ஈரான்-இஸ்ரேல் போர் ஒன்று நடக்குமாக இருந்தால் நிச்சயமாக ஈரானுக்குள் அதிரடியான பல தாக்குதல்களை இஸ்ரோல் நடாத்தி ஈரானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்ற ஏற்பாடுகளை ஏற்கெனவே இஸ்ரேல் செய்திருக்கின்றது.
நெடுநாளாக எதிர்பார்க்கப்படும் ஈரான்-இஸ்ரேல் சண்டை நடக்குமாக இருந்தால் போர் வரலாற்றில் புதிய பல யுக்திகளையும் போர்த் தளபாடங்களையும் உலகம் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்