நஜீப்
நன்றி:22.02.2026 ஞாயிறு தினக்குரல்
நான் இப்போது சற்று விரக்தியில் ஹப்புத்தலை வீட்டில் இருக்கின்றேன். அதனால் அங்கு நாய்களை வளர்த்து வருகின்றேன். நமது அரசியலைப் பொறுத்தவரை ரணில் கவர்ச்சியில்லாத ஒரு மனிதன். ஆளை மக்களிடம் சந்தைப்படுத்த முடியாது. அதே நேரம் அனுர நமது அரசியலில் மிகக்கவர்ச்சியான ஒரு மனிதன்.
எதிரணி அரசியல்வாதிகள் கூறுவது போல இந்த அரசாங்கத்தின் செல்வாக்கு ஒரு பத்து சதவீதமேனும் வீழ்ச்சியடையவில்லை. அப்படி சரிந்திருந்தாலும் அதனை பெரிதுபடுத்த முடியாது. பதவில் இருக்கும் போது அரசுக்கு விமர்சனம் வருவது இயல்பானது. தன்னிடம் கட்சியை புனரமைக்கின்ற பணியை ரணில் ஒப்படைத்திருக்கின்றார்.
அந்தப் பணியை மேற்கொள்ள இருக்கின்றேன். சஜித்-ரணில் இணைந்தால் தேர்தல்களில் எமக்கு 30-40 சதவீத வேட்பாளர் பங்கு வேண்டும் இது ஐதே.கட்சி தரப்பு எதிர்பார்ப்பு இது ஹரின் பர்ணாந்து கதை. இந்தக் கோரிக்கைக்கு சஜித் தரப்பு தருகின்ற பதில் என்ன!





