விமானத்தில் பயணித்த 242 பேரும் பலி

விமான விபத்தில் இறந்தோருக்கு ரூ.3.49 (SL) கோடி..

காயமடைந்தோரின் சிகிச்சை செலவை ஏற்ற டாடா !

Air India plane crash: London-bound flight had 169 Indian nationals and 53 British nationals on board - The Economic Times

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

இதில் விமானத்தில் பயணித்த 242 பேரும் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3.49 (SL) கோடி இழப்பீடாக வழங்கப்படும் என்று டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

Air India Plane Crash Update: Key questions about Air India Ahmedabad-London flight crash answered | Air India ai171 Ahmedabad Plane Crash Today All we know so far

இதுதொடர்பாக டாடா குழுமம் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறியுள்ளதாக அந்த எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“விமானத்தில் அசாதாரண சூழல் இருந்தது.. விபத்துக்கு 2 மணி நேரம் முன் பயணித்த பயணி பகிர்ந்த வீடியோ” ஏர் இந்தியா விமானம் 171 விபத்து பற்றி அறிந்து நாங்கள் மிகவும் வேதனையடைந்தோம்.

air-india-plane-crash-tata-group-will-provide-rs-1-cr-to-the-families-of-each-person-who-has-lost-t

எங்களின் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. விமான விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்காக எங்களின் பிரார்த்தனைகள் உள்ளன.

இந்த துயரத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ரூ.3.49 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகளையும் நாங்களே ஏற்போம். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவையும் நாங்கள் உறுதி செய்வோம்.

பிஜி மருத்துவ விடுதியை கட்டி கொடுக்க ஆதரவு வழங்குவோம். கற்பனை செய்ய முடியாத இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

குஜராத் விமானம்: விபத்தா? சதியா?

Next Story

கைக்கு எட்டிய தூரத்தில் அமெரிக்க, இஸ்ரேல்-ஈரானுடனான போர்.