விமலின் மறைக்கப்பட்ட கதை!

-நஜீப்-

தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற 4 படை அதிகாரிகளை விரட்டவும், இல்லாவிட்டால் தனக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டா ரணிலை எச்சரித்திருக்கின்றார். ‘ஒன்பது மறைக்கப்பட்ட கதை’ என்ற தான் எழுதிய நூல் தொடர்பான கலந்துறையாடல்களை அவர் தற்போது நடாத்திக் கொண்டு வருகின்றார்.

இப்படியான ஒரு சந்திப்பு கொள்ளுபிடிய பகதல றோட்டில் அமைந்துள்ள ஹோட்டலில் கடந்த மே 23ம் திகதி நடந்திருக்கின்றது. அதில் ‘மைக்கை ஓப்’ பண்ணி விட்டு விமல் வீரவங்ச பேசும் போது இப்படியும் சொல்லி இருக்கின்றார். போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டா இருப்பிடத்தை சுற்றி வளைத்த போது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யாதது பற்றியும் அவர் சில கதைகளைச் சொல்லி இருந்தார்.

அதில் சில அதிகாரிகள் பெயரும் உச்சரிக்கப்பட்டிருக்கின்றது.  மேலும் மஹிந்தாவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்துக்கு பசிலை நியமிக்கும் தேவை இந்தியாவுக்கு இருந்தது என்றும் விமல் அங்கு பேசி இருக்கின்றார்.!

நன்றி:28.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அரசு பலமாகவே இருக்கின்றது.!

Next Story

சம்பந்தன் - சஜித் சந்திப்பு