நஜீப்
நன்றி 07.12.2025 ஞாயிறு தினக்குரல்
ஜேவிபி. தலைவர் விஜேவீர அரசியல் வாழ்கையில் யாழ்ப்பாணத்தில் கல்லெறிதலுக்கு இலக்கானது மறக்க முடியாத ஒரு சம்பவம்.
தலையில் இரத்தம் கொட்டக் கொட்ட விஜேவீர மேடையில் பேசியதை அரசியல் ஆர்வமுள்ள எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.
ஆனால் இந்தத்தாக்குதலுக்கு வடக்குத் தெற்கு அரசியல் முரண்பாடுகள், அதாவது தழிழ்-சிங்கள குரோதங்கள்தான் காரணம் என்று பெரும்பாலானவர்கள் இன்றுவரை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்தக் கருத்தும் கதையும் முற்றிலும் தவறானது.
அன்று இடதுசாரிகள் மத்தியில் மாஸ்கோ பீக்கிங் அல்பேனிய குழுக்கள் என அணிகள் செயல்பட்டு வந்தன. அந்த கொள்கை முரண்பாடுதான் இந்தக் கல்லெறிக்குக் காரணம்.
தாக்கியவரை பொலிசார் உடனே பிடித்தும் விட்டார்கள். அப்போது விஜேவீர அவரை விட்டுவிடுங்கள் இது எங்கள் குடும்ப விவகாரம் என்று பொலிசாருக்கு சொல்லி இருக்கின்றார்.
தாக்கியவரை விஜேவீராவுக்கும் தெரியுமாம். அன்றைய சம்பவத்தில் விஜேவீரவுடன் கூட இருந்த புஞ்சிஹேவா தந்த தகவல் இது.!





