செய்தி வாராந்த அரசியல் 16.06.2024 June 20, 2024June 23, 2024 –நஜீப்– அடுத்த ஜனாதிபதியும் ரணிலே! 1 ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்று தீ மூட்டிய ஐதேக. ரங்கே பண்டார இப்போ அது தனது தனிப்பட்ட கருத்து என்கின்றார். இப்போது அவர் ஒரு புதுக் கதையையும் சொல்கின்றார். அவர் கணக்குப்படி ரணில் 2024 தேர்தலில் எழுபது (70) இலட்சம் வாக்குகளைப் பெற்று நிச்சயம் வெற்றி பெறுவாராம். அவர் கணக்கை சற்றுப் பாருங்கள்.! இறுதித் தேர்தலில் ஐதேக. இரண்டரை இலட்சம் வாக்குகள் பெற்றது. கடந்த தேர்தலில் ரணிலும் சஜித்தும் பிரிந்ததால் இருபத்தி ஏழு இலச்சத்திற்கும் அதிகமானோர் யாருக்குமே வாக்களிக்கவில்லை. தற்போது சஜித் அணியில் இருக்கின்ற அரைவாசிப்பேர் எம்முடனே இருக்கின்றார்கள். மொட்டுக் கட்சி மற்றும் ரின்என்ஏ. யிலும் இதே நிலை. இவர்கள் அனைவரும் கொண்டுவரும் வாக்குகள் எல்லாம் சேர்த்தால் இந்த இலக்கு சுலபமாக வந்து விடும். கடந்த தேர்தலில் சஜித் இருபத்தி ஏழு இலட்சம் வாக்குகளையே பெற்றார். அதில் பதின்நான்கு இலட்சம் வாக்குகள் தமிழ் முஸ்லிம் வாக்குகள். இதுவும் நமக்குத்தான். இது ரங்கே விடும் கதையும் கணக்கும். 2 சுத்துகின்ற காலம் குளோஸ்! இதுவும் ஜனாதிபதி ரணில் சம்பந்தப்பட்ட ஒரு கதை. இப்போது சுத்துகின்ற காலம் முடிந்து விட்டது. அது நுற்றாண்டுகள் கடந்த பழைய கதை. இன்று தொட்டு விட்டால் போது ஒகே. ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்குகின்ற ஒரு கூட்டத்தில் ரணில் இந்தக் கருத்ததை கூறி இருந்தார். அவர் சுத்துகின்றது என்று கிண்டல் பண்ணியது சஜித்தின் சின்னமான தொலைபேசியைத்தான். மனிதன் தொட்டால் ஓகே என்று சொன்னரோ அது என்ன என்று யோசிக்கின்றீர்களா? வருகின்ற தேர்தலில் அவர் பொது வேட்பாளராக வர எதிர்பார்க்கின்றார். அவர் அதற்காக பாவிக்க இருக்கும் சின்னம்தான் கையடக்கத் தொலைபேசி. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ் தனது பெயரில் பதிவு செய்து வைத்திருக்கும் அரசியல் கட்சியின் சின்னம்தான் இது. இதனைத்தான் ரணில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பாவிக்க இருக்கின்றார் என்று நமக்கு நம்பகமான ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. 3 லண்டனில் அணுர அதிரடி! பெரும் சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பை மஹரகம் இளைஞர் சேவை மையத்தில் நடாத்தி முடித்தார் அணுரகுமார திசாநாயக்க. இந்த பொலிஸ் மா நாட்டை குழப்ப ஆளும் எதிரணியினரால் பல முயற்சிகள் நடந்தன. அன்பாகவும் விணையமாகவும் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள்கள். கடைசியாக வெளிக்கடைக்குப் போக வேண்டுமானால் நீ அணுர கூட்டத்துக்குப் போ என்று எச்சரிக்கப்பட்டிருக்கின்றார் செல்வாக்கான பொலிஸ் அதிகாரி ஷhனி அபேசேகர. இப்போது லண்டனில் இருக்கும் அணுர அங்குள்ள நம்மவர்களை சந்திக்கின்றார். இலங்கை அரசியல்வாதி ஒருவர் இப்படி அதிரடியான ஒன்று கூடல்களை வெளிநாடுகளில் நடத்தி வருவது இது முதல் முறை. தற்போது லண்டனில் இருக்கும் அணுரா சனிக்கிழமை (15) நமது நேரப்படி பி.ப 2 மணிக்கு அவர் அங்கு மக்களைச் சந்திக்கின்றார். இதற்குப் புறம்பாக அங்குள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களையும் அவர் தனித் தனியாக சந்திக்கின்றார். 4 மஹிந்த மேடைக்கு வராதது ஏன்? தற்போது தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் மேற்கொண்டு வருகின்றார்கள். மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மர்மமாக இருந்தாலும் அவர்களும் பரப்புரைகளைத் துவங்கி விட்டார்கள். அப்படி ஒரு கூட்டம் கடந்த வாரம் மாத்தளை–ரத்தோட்டையில் அமைப்பாளர் றோகன திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபாக்ஸ மாத்தளைக்கு போய் இருந்தாலும் போதியளவு கூட்டம் வராததால் அவர் மேடைக்குப் போகாது மாத்தளையில் தங்கி ஹேட்டலிலே இருந்து விட்டாராம். மேலும் அமைப்பாளர்கள் மத்தியில் கருத்து மோதல்களால் அவர் அங்கு வருவதைத் தவிர்த்தார் என்றும் இன்னும் ஒரு கதை. ஜனக்க பண்டார தென்னேகோன், பிரமித்த தென்னகோன் என்போருக்கு கூட்டத்திற்கு கதவடைப்பாம். கட்சிக்குள் என்னதால் வெட்டுக் குத்துக்கள் வந்தாலும் மொட்டுக் கட்சியில் ராஜபக்ஸாக்கள் விரல் நீட்டுகின்றவர்தான் அங்கு ஜனாதிபதி வேட்பாளர். 5 மு.கா.சஜித்துடன்தான்–தலைவர்! ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் பேசும் போது மு.கா. தலைவர் ஹக்கீம் ஜனாதிபதித் தேர்தல் வருகின்றது என்ற எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும் பொதுத் தேர்தல் கூட வரலாம். அல்லது தேர்தலே வராமலும் போகலாம். சரி தலைவா உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டால் நாங்கள் சஜித் பக்கம்தான். எல்லா வேட்பாளர்களும் ஜனாதிபதித் தேர்தலை வேண்டி நின்றாலும் சஜித் மட்டும்தான் பொதுத் தேர்தல் வேண்டும் என்று கேட்கின்றார் என்றும் அங்கு அவர் சுட்டிக் காட்டி இருந்தார். ஹக்கீம் கருத்துப்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு சஜித் அஞ்சுகின்றாரோ தெரியாது. பொதுத் தேர்தலுக்குத்தானே இன்னும் காலம் இருக்கின்றதே.! தலைவர் கதைப்படி மு.கா. சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்து விட்டது என்று தெரிகின்றது. தொலைபேசி இணைப்பில் இருந்தால்தானே கண்டியில் சீட்டு. கிழக்குத் கட்சித் தொண்டர்களும் இதே நிலைப்பாட்டில்தானே தெரியாது! Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in September 10, 2025September 10, 2025 හරක්කටාගෙන් කෝටි 50 ක් කප්පම් ගත් නලුවා කවුද? September 10, 2025September 10, 2025 மகிந்த ராஜபக்சவுடன் கெஹேல்பத்தர பத்மே! මනම්පේරි කන්ටේනර් ගෙනාපු වීඩියෝ එළියට/නුවර එළි ගිය හැටිත් ඒ අතර/ගෙනා බඩු වලින් අයිස් කිලෝ14 ක් හදලා. September 10, 2025 චමුදිත පොහොට්ටුව නාවපු හැටි September 10, 2025 කුඩු කන්ටේනර් දෙකේ ඇත්ත කතාව. පාර්ලිමේන්තුවෙන් ඇසෙයි. September 9, 2025September 9, 2025 இஸ்ரேலின் கத்தார் சம்பவம் : அமெரிக்காவின் திட்டம் தான் September 9, 2025September 9, 2025 நேபாளத்தில் அமைச்சருக்கு அடி, உதை – கலவரமான Gen Z புரட்சி! – Previous Story இன்று முதல் கார்டியன் நியூஸ் அறிமுகம் Next Story மூன்றில் இரண்டை விலைக்கு வாங்கி பதவியை நீடிக்கும் -சதி-
September 10, 2025September 10, 2025 மகிந்த ராஜபக்சவுடன் கெஹேல்பத்தர பத்மே! මනම්පේරි කන්ටේනර් ගෙනාපු වීඩියෝ එළියට/නුවර එළි ගිය හැටිත් ඒ අතර/ගෙනා බඩු වලින් අයිස් කිලෝ14 ක් හදලා.