சஜித் நிராகரிக்கின்றார்!
–நஜீப்–
நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல்
நமக்கு வருகின்ற தகவல்களின் படி ரணில்-சஜித் கூட்டணி முறிந்து விட்டது. அதற்கு சஜித் ஒத்துழைக்காமை பிரதான காரணமாம்.
குறைந்தது கொழும்பு கண்டி ஆகிய இரு பெரும் நகரங்களைக் கைப்பற்றும் ஒரு முயற்சி நடந்தது. இந்த குறைந்த பட்ச கூட்டணிக்குக் கூட சஜித் தயாராக இல்லை.
அந்தத் திட்டப்படி படி யானை சின்னத்தில் இந்த இரு நகரங்களில் ஒரு பொது அணியை இறக்கும் திட்டம். அதனைக்கூட ரணில்-சஜித்தால் எட்ட முடியாத நிலையில் இவர்கள் எப்படித்தான் வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுக் கூட்டணி பற்றிச் சிந்திப்பது.?
சஜித் ஹிருனிக்க அல்லது பார்மான் காசிமை தமது சார்பில் களமிறக்க முயற்சிக்கின்றார். ஆளும் தரப்பு ராய் பல்தசாரி அல்லது கெடபே ஆரச்சியை தனது முதன்மை வேட்பாளர்களாக களமிறக்க முயல்வதாக தகவல்.
ரணில்-சஜித் தரப்பில் பொது வேட்பாளர்களைக் களமிறக்கும் ஐதேக. திட்டத்தை கலந்து பேசக் கூட சஜித் தயாராக இல்லை.
வங்குரோத்துக்காரர்களுடன் கூட்டணி போட்டு எப்படித்தான் கோட்டையைப் பிடிப்பது என்று சஜித் யோசிக்கின்றார் போலும்.!
ஜனாதிபதி டுபாய் விசிட்!
–நஜீப்–
நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல்
ஜனாதிபதி அனுர குமார டுபாய் விசிட்டும் அங்கு அவர் ஆற்றிய உரையும் என்னதான் உலகத் தலைவர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது என்று சொன்னாலும் அவரது அரசியல் எதிரிகள் அவரது சேர்ட் பட்டனில் தொங்கிக் கொண்டு தமது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சமூக ஊடகங்களும் எதிரும் புதிருமாக இந்த விடயங்களைப் பேசிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஜனாதிபதி நாட்டுக்கு வந்த கையோடு வருகின்ற பட்ஜெட் தொடர்பான பணிகளை அதிகாரிகளுடன் கூடிப் பேசி இருக்கின்றார்.
ஆடை விவகாரங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளும் அனுர தவறுவிட்டிருக்க மாட்டார். அப்படித்தான் தவறு நடந்திருந்தாலும் அதிகாரிகள்தான் அதற்குப் பொறுப்பு என்றும் கதைகள்.
ஏற்கெனவே ஆடை விவகாரங்களில் அனுர ஒரு இடதுசாரியாக இல்லை என்று சொன்னவர்கள் இப்போது ஆடையால் நாட்டை அவமானப்படுத்தி விட்டதாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நமது நாட்டு அரசியல்வாதிகள் பண்ணி இருக்கும் அட்டகாசங்களைப் பார்க்கின்ற போது இவை எல்லாம் ஒரு கதையா?
சட்டம் அடித்த பல்டி!
-நஜீப்-
நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல்
லசந்த விக்கிரமதுங்ஹ படுகொலை நடந்து பதினாறு வருடங்கள் கடந்து போனாலும் அதன் ஓலங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை.
அவரது ஊடக சகாக்கள் இந்தப் படுகொலை விவகாரத்தில் நீதிகோரி வருகின்ற அதே நேரம் சட்ட மா அதிபர் பாலிந்த ரணசிங்ஹ அதில் சந்பந்தப்பட்ட மூன்றுபேரை குற்றப் பட்டியலில் இருந்து விடுதலை செய்து வெளியிட்ட உத்தரவு நட்டில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் ஜனாதிபதி கூட கடுப்படைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருந்தார்.
அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவரசப்படாதீர்கள் லசந்தவுக்கு நாம் நீதியைப் பொறுத் தருவோம் என்று மக்களுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கின்றார்.
இந்த நிலையில் சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கின்றார். முன்பு தமது முடிவு தவறு என்றால் நீதி மன்றம் போங்கள் என்றவர்கள் இப்போது என்ன சொல்லப் போகின்றார்கள்?