வாராந்த அரசியல்: நன்றி 24.09.2023 ஞாயிறு தினக்குரல்

-நஜீப்-

சிராஜ் ஏமாற்றி விட்டாரா!

Mohammed Siraj praised on social media as India win Asia Cup

ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய வெற்றிக் கிண்ணத்துக்கான போட்டியில் எட்டாவது முறையாகவும் இந்திய அணி அதனைக் கைப்பற்றி அதில் பல சாதனைகளையும் நிலை நாட்டி இருந்தது. இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு மைதான ஊழியர்கள் கடின உழைப்பே காரணம் என்று பாராட்டி அவர்களுக்கு ஆசிய கிரிக்கட் வாரியம் 50000 அமெரிக்க டொலர்களைக் கொடுத்திருந்து.

ஆனால் பந்து வீச்சாளர் சிராஜ் தனக்குக் கிடைத்த 5000 டொலர்களையும் அந்த ஊழியர்களுக்குத் தந்து விட்டதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது ஆனால் அப்படி அவர் பணத்தை தமக்குத் தருவதாக சொன்னதாக தானும் கேள்விப்படுக்கின்றறோன் ஆனால் இது வரை அது நமக்குக் கிடைக்கவில்லை என்று பிரதம மைதான நிருவாகி கொட்ரி தாபரே  ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இலங்கை அணி தோற்றுப் போனது தனக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. அதனால் இந்திய வீரர்களுக்குப் போய் கை லாகு கொடுக்கக் கூட எனக்கு மனசு வரவில்லை அதனால் நான் அதனைத் தவிர்த்துக் கொண்டேன் என்றும் மைதானப் பொறுப்பாளர் பகிரங்கமாக ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார். இது பற்றி உலக கிரிக்கட் வாரித்தின் நிலைப்பாடு என்ன?

பிள்ளை திருந்தி விட்டது!

NHDA fraud: Accountant, auditor interdicted – The Island

நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானை புலி என்று கூறுக்கின்றீர்கள் அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன்  சம்பந்தப்பட்டு இருந்தார்.  பின்னர் அவர் திருந்தி விட்டார் இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பிள்ளையானுக்கு சான்றிதழ் கொடுக்கின்றார் இராஜங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்ஹ.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சாட்சியார்கள் வெளிநாடு செல்கிறார்கள் என்றால், உங்கள் நல்லாட்சியில் தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார். நீங்கள் தான் அவர்களை பாதுகாத்தீர்கள்.  2019 சம்பவத்திற்கு பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் வரையில் ஏன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்?

எதிர்க்கட்சித் தலைவரே நீங்களும் அந்தக் குழுவில் இருந்தீர்கள் தானே, ஏன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்? தடுத்திருக்கலாமே? உங்கள் ஆட்சியில் தான் இது நடந்தது.2015 இலிருந்து 2019 வரை உங்கள் ஆட்சிதானே. பொய்யாக ஒவ்வொரு கட்சிக்கும் அரசியல்வாதிகள் மீதும் குற்றஞ்சாட்ட வேண்டாம். எனவும் அவர் எதிரணியினரைக் கேட்டுக் கொண்டார்.

புதிதாக 13 அமைச்சர்கள்!

Gotabaya's ouster and Ranil Wickremesinghe's arrival - Challenges before the people of Sri Lanka | Tamil Guardian

வழக்கமாக பசில் ராஜபக்ஸ நேரம் கேடடுப் போய் தமது தரப்புத் தேவைகள் தொடர்பாக ஜனாதிபதி ரணிலை நச்சரிப்பதுதான் இதுவரை நடந்து வந்திருக்கின்றது. அந்த அத்தனை முயற்சிகளும் இதுவரை வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கு மாற்றமாக இந்த முறை ஜனாதிபதி ரணில் தான் அமெரிக்க போவதற்கு முன்னர் பசில் ராஜபக்ஸாவை அழைத்து சில விடங்களைப் பேசி இருக்கின்றார்.

நமக்கு வருகின்ற தகவல்படி வர இருக்கின்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் ஒரு வார்த்தையேனும் அங்கு பேசவில்லை. என்று தெரிகின்றது. அரச தரப்பை மேலும் பலப்படுத்தி அரசை முன்னெடுப்பதுதான் ஜனாதிபதி ரணில் திட்டமாக இருக்கின்றது.

எனவே தான் 13 வரையிலான அமைச்சர்களை மொட்டுக் கட்சியிலிருந்து நியமிக்க முடியும் என்ற அவர் தனது நிலைப்பாட்டை அங்கு தெரியப்படுத்தி இருக்கின்றார். மேலும் தனக்கு வேண்டிய இன்னும் சிலருக்கும் அதில் வாய்ப்பாம். அப்படி அமைச்சுப் பெற சிபார்சு செய்யப்பட்டிருக்கின்ற சிலரையும் அமெரிக்கா பயணத்திற்கு அவர் அழைத்துக் கொண்டு போய் இருக்கின்றார். இதில் பொத்துவில் பல்டிக்காரரும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

இது ஒரு நினைவு மட்டும்!

மஹிந்த திருப்பதி சென்ற விமானம் யாருடையது? - Sri Lanka Guardian News

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கண்டு தொடை நடுங்கி, கைகள் இரண்டையும் கட்டி ஹக்கீம் இருந்த இருப்புக்கள் தம்முடைய அகக் காட்சியிலே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சூழலில் ரவூப் ஹக்கீமை சமநிலைப்படுத்துவதற்காக தவிசாளராக இருந்த நான் அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் ‘அண்ணே சிங்களப் பெரும்பான்மை இனத்தை அடிமையாக்குகிறது என்பதற்காக தானே நீங்கள் ஆயுதம் தூக்கினீர்கள் ஆகவே மேலுமொரு தமிழ் பேரினவாதத்தை உருவெடுக்க வைத்து சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம்களையும் ஆயுதம் தூக்க சொல்லப் போகின்றீர்களா’ என நான் கேட்டவுடன் தான் ரவூப் ஹக்கீம் அவர் கட்டியிருந்த கையை எடுத்தார். அட இப்படியும் தலைவரைப் போய் பேச முடியுமா என்று சிலர் கேட்கலாம். இது ஒரு வரலாறு அதற்காகத்தான் இந்த நினைவூட்டல் எனவும் குறிப்பிடுக்கின்றார் அதாவுல்ல.

தகவல் தர முடியாது-சபாநாயகர்

Sri Lanka: Parliament Speaker Mahinda Yapa Abeywardena to take charge as interim PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கிய இரகசிய சாட்சியக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடாமை குறித்து சபையில் எழுப்பப்பட்ட விடயங்கள் மற்றும்  மேற்படி சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்காமை தொடர்பில் அது தொடர்பில் உண்மையான நிலைமையை கௌரவ சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதி செயலாளரால் கடிதங்கள் ஊடாக எனக்கு அறிவித்ததிற்கு அமைய, இரகசிய சாட்சி குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது எனவும், நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியின் செயலாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பதை இந்த சபைக்கு அறிவிக்கிறேன் என்றார் சபநாயகர்.

Previous Story

IMF 2 ம் கடன் தவணை தாமதமாகலாம்!

Next Story

யார் இந்த அபூ ஹிந்!