வாய்த்திறந்த விராட் கோலி! கூறியது என்ன?

 

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார். இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதில் இருந்து பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. அவருக்கு மாற்றாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட ரசிகர்களை மேலும் சூடாக்கியது.  இவங்க தான் டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்..!! ஆஸி. வீரர் வார்னே கருத்து ஒருநாள் அணியின் கேப்டன்சியில் தொடர்வதாக விராட் கோலி தெரிவித்த போதும், பிசிசிஐ அதனை ஏற்றுக்கொள்ளாமல் முடிவெடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சர்ச்சைகள் இதனையடுத்து இந்த விவகாரம் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் எதிரொலித்தது. இந்திய அணி வரும் டிசம்பர் 16ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்காக அனைத்து வீரர்களும் பயோ பபுளுக்குள் நுழைந்துவிட்ட போதும், விராட் கோலி வரமுடியாது என்பது போல உள்ளார். மேலும் ஒருநாள் போட்டி தொடரிலும் பங்கேற்க போவதில்லை எனத் தகவல் வெளியானது. பிடிவாத முடிவுகள் அதாவது ரோகித் சர்மா கேப்டனாக செயல்படபோகும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் எனத்தெரிவிக்கப்படட்து. இதே போல விராட் கோலி கேப்டனாக செயல்படும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா வெளியேறியுள்ளார்.

காயத்தை அவர் காரணமாக கூறினாலும், இருவருக்குள் இருக்கும் பிரச்சினை வெளிப்படையாக தெரிகிறது. கோலியின் விளக்கம் இந்நிலையில் இந்த விவகாரத்தில் விராட் கோலி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார். இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், நான் நிச்சயம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுவேன், எப்போதும் இந்திய அணிக்காக இருப்பேன் எனக்கூறியுள்ளார். கேப்டன்சி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது தகவல்கள் முற்றிலும் பொய்யானது, இந்த சர்ச்சைகள் குறித்து அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏன் வாய்த்திறக்கவில்லை டெஸ்ட் அணி தேர்வு செய்த போது, என்னிடம் ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டது. நான் அப்போதே சம்மதம் கூறிவிட்டேன். அதன்பிறகும் கூட பிசிசிஐ அதிகாரிகள் கூட நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளேன். எனவே அந்த விவகாரம் அப்போதே முடிந்தது. இதனால் நான் அதன்பிறகு எதையுமே பதிவு செய்யவில்லை என கோலி கூறினார்.

Previous Story

வைரமுத்துபுதிய கூட்டணி.!

Next Story

இலங்கை கடன் பொறி!  சீனாவா? மேற்குலக?