வாசு பவித்திர மோதல்

-நஜீப்-

ஜனாதிபதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஜீ.ஆரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். தனது பிரதேசத்தில் கிரிஎல்ல என்ற பொலிஸ் நிலையத்தில் தனக்கு வேண்டிய ஓஐசி ஒருவரை நியமித்துக் கொள்ள அமைச்சர்  அனுமதி தருகின்றார் இல்லை என்று முறைப்பாடு செய்திருக்கின்றார்.

அப்போது அங்கு எழுந்து நின்ற அமைச்சர் பவித்தரா வன்னியாரச்சி இது எங்களுடைய மொட்டு அரசாங்கம் எங்களுக்கு வேண்டியவாறுதான் ஆட்களை நியமனம் செய்ய முடியும் என்று வாசுக்கு பதில் கொடுத்திருக்கினறார். அதன் பின்னர் அரசியல்வாதிகள் சொல்லுகின்ற படி இடமாற்றங்கள் செய்ய முடியாது என்று பொலிஸ் அமைச்சர் வீரசேக்கரவும் கூறி இருக்கின்றார்.

ஆனால் பிரதமர் எம்.ஆரும் நிதி அமைச்சர் பீ.ஆரும் அப்படி இல்லை. இப்படியான நியமனங்களைச் செய்யும் போது பிரதேச அரசியல்வாதிகளைக் கலந்து செய்வது நல்லது என்று பொலிஸ்கார அமைச்சருக்கு பதில் கொடுத்திருக்கின்றார். கூட்டத்தில் இடமாற்றத்துக்கு மூன்று, ஐந்து இலட்சம் என்று கேட்கப்படுகின்றது என்று ஓசைகள் எழுந்திருக்கின்றது.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 20.02.2022

Previous Story

74,000 கோடி கடன் - மேலும் வழங்க வேண்டாம்: மத்திய வங்கி

Next Story

சட்டம் படித்தவர் என்பதால் மட்டும் சுமந்திரனால் தீர்வை பெற்றுத்தர முடியுமா?