வாசு இடதுசாரியா?

-நஜீப்-

அண்மையில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக தொடர்ச்சியாக அமைச்சர் வாசு தேசவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, மக்களிடம் பணம் இல்லை.

வாங்குவதற்கு சந்தையில் பொருட்கள் இல்லை என்று கேள்வி எழுப்பிய போது பணம் இல்லை என்றால் அது அவர்களுடைய சொந்தப் பிரச்சனை. அரசு அதற்கு என்ன பண்ண முடியும் அதனை அவர்கள்தான் பார்த்தக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.

இதே போன்றுதான் வட மேல் மாகாண ஆளுநராகவும் இலங்கை கம்யூனிச கட்சித் தலைவராகவும் பதவி வகித்த ராஜா கொலுரே ஆசிரியர்கள் போராட்டத்தின் போது அவர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கக் கூடாது என்று சொல்லி இருந்தார்.

அதன் பின்னர் சில மாதங்களில் அவர் இறந்தும் போனார். எனவே நாட்டு மக்கள் பொருளாதர நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் போது ஒரு இடதுசாரிகள் அதனை அவர்களது சொந்தப் பிரச்சனை என்று கூறுவது என்ன நியாயம்.

நன்றி 02.01.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நூல் வெளியீட்டு நிகழ்வு

Next Story

இலங்கை வந்த மகாராணியின் கோல்!