வாங்கிக் கட்டிய ரணில் – நீதிமன்ற உத்தரவு

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை வௌியிடப்பட்டுள்ளது.

 

பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous Story

தேர்தல் நடத்தப்படும் திகதி: புதிய அறிவிப்பு!

Next Story

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய்தூள் பூசி, புழுவை உடலுக்குள் செலுத்திய கணவன்