வருமையின் முதலிடம் நமக்கு!

-நஜீப்-

தெற்காசிய நாடுகளின் வருமையின் முதலாம் இடத்தைப் பிடித்திருக்கும் நாடு இலங்கை என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றது. 2ம் இடம் பாகிஸ்தானுக்கு. நமது தலைவர்கள் இலங்கையை சிங்கப்பூராக்குவதாகவும் ஆசியாவின் ஆச்சர்யமாக்குவதாகவும் நமக்கு கதை விட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் தெற்காசியாவிலேயே வருமையின் முதல் இடம் நமக்கு!

உலகில் 11ம் இடம். இது குறித்து நமக்கு கதை விட்ட தலைவர்கள் வெட்கப்படுகின்றார்களா என பார்த்தால் அப்படி ஏதும் இல்லை. இப்போது புதுக் கதையாக 2048ல் நாம் உலகிலே செல்வந்த நாடாம். அமெரிக்கா> ஐரோப்பிய நாடுகளுக்குக் கூட நாம் கடன் கொடுப்பவர்களாக இருப்போமாம். இப்படி சில மாதங்களுக்கு முன்னர் நமது ஜனாதிபதி ரணில் சொல்லி இருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களை என்னவென்று நினைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் இப்படியான கதைகளை நமக்கு விடுகின்றார்களோ தெரியாது. இதற்கு முன்னர் நிலாவில் இருந்து அரிசி தந்தவர்களுக்கும் எட்டுத் கிலோ தானியம் தருவதாகச் சொன்னவர்களையும் அதிகாரக் கதிரையில் வைத்து அழகு பார்த்த தேசம் அல்லவா இது. ஐயோ கடவுளே இந்தக் கொடுமைக்கு முடிவே கிடையாதா?

நன்றி: 04.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பறக்கும் தட்டு ஆய்வுக்கு மிரட்டல்கள் வருவது ஏன்?

Next Story

 மணிரத்னம் - இளையராஜா கூட்டணி : பிறந்த நாள் பகிர்வு