வரி வசூல் அக்கிரமம்!

-நஜீப்-

இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வின் போது மஹிந்தானந்த அலுத்கமகே வரி செலுத்துவது தொடர்பாக இன்னும் பல தகவல்களை வெளியிட்டார். அதன்படி இந்த நாட்டில் வரி செலுத்துவோரில் கடந்த வருடம் அதனை செலுத்தி இருப்போர் எண்ணிக்கை முப்பதாயிரம் (30000) பேர் மட்டுமே. அதுவும் போதியதாக இல்லை.

இந்த நாட்டில் நம்பர் வன் அரசி வியாபாரி கடந்த ஐந்து வருடங்களாக ஒருசதம் கூட வரி செலுத்தவில்லை. அதே நேரம் இரண்டாம் இடத்தில் இருப்பவர் ஒன்பது இலட்சமும் மூன்றாம் இடத்தில் இருப்பவர் 50 மில்லியன்களும் செலுத்தி இருக்கின்றார்கள்.

இது போன்று ஆடை ஏற்றுமதியாளர்கள் சுபர் மார்க்கட் உரிமையாளர்கள் மது உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் தேயிலை ஏற்றுமதியாளர்கள் கசீனோ முதலாளிகள் என்று பெரும் பெரும் வர்த்தக பிரதானிகள் முறையாக வரி செலுத்துவதில்லை.

ஒரு வங்கி அதிகாரியின் மாத சம்பளம் 14 இலட்சம். அவருக்கான வரியைக்கூட அந்த வங்கிதான் செலுத்திக் கொண்டிருக்கின்றது. இது போன்று எத்தனை அதிகாரிகள் இருக்கின்றார்கள் என்று தேடிப்பார்க்க வேண்டும். அதுவும் 1948 ஆண்டு சட்டப்படிதான் வரிகள் அறவிடப்படுகின்றன.

நன்றி: 11.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

2ம் எலிசபெத் ராணி: UK அரச குடும்ப அரியணை வாரிசு வரிசை 

Next Story

“ரணில் : கோட்டா வெளியிட்டுள்ள இரகசியம்”