வரவு செலவுத்திட்டத்திற்கு முன் மகிந்தவை பிரதமராக நியமிக்க தீவிர முயற்சி

வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக பொதுஜன பெரமுனவில் உள்ள அவருக்கு ஆதரவான அணியினர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியிடம் எதிர்பாராத பதில் தாக்குதலை எதிர்கொண்ட அணியினர்

இந்த அணியே தாம் பரிந்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கவில்லை என்றால், 22வது திருத்தச்சட்டத்தை தோற்கடிக்க போவதாக ஆரம்பத்தில் அச்சுறுத்தி விட்டு, சில தினங்களுக்கு முன்னர் இந்த கோரிக்கை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க போவதாக ஜனாதிபதியை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அப்போது ஜனாதிபதியிடம் இருந்து எதிர்பாராத கடும் பதில் தாக்குதல் காரணமாக இந்த அணியினர் திரும்பி வர நேரிட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த அணியினர் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது போனால், வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க போவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் அணியினர்

வரவு செலவுத்திட்டத்திற்கு முன் மகிந்தவை பிரதமராக நியமிக்க தீவிர முயற்சி | Serious Attempt Appoint Mahinda As Prime Minister

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிப்பது சம்பந்தமாக இந்த அணியினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மகிந்த மீண்டும் பிரதமராக பதவியேற்பாராயின் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் என தினேஷ் குணவர்தன கூறியுள்ளதாக தெரியவருகிறது.

வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கும் நிலைப்பாட்டில், இந்த அணியினர் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இவர்களின் முயற்சிக்கு பசில் ராஜபக்ச ஆதரவு அணி ஒத்துழைப்பு வழங்காது அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இந்த நடவடிக்கைக்கும் பசில் ராஜபக்சவுக்கும் தொடர்பில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

Previous Story

குஜராத் மோர்பி பால விபத்து: இதுவரை 151 பேர் பலி

Next Story

உப்பை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவுறுத்தல்