வந்த வேகத்திலே ஓட்டமெடுத்த ஜனாதிபதி GR

ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி எழுந்து சென்று விட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

கோடடா கோ  ஹோம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்ததுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் அமர்ந்திருந்தார்.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் சிறப்புரை ஒன்றை ஆற்றினார்.

இதன் போது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு தடையேற்படுத்தி, ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கோட்டா கோ ஹோம் என கோஷமிட்டு அவர்கள் ஜனாதிபதிக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

 வெளியேறிய ஜனாதிபதி

வரலாற்றில் எப்போதும் நடக்காத சம்பவம்! நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இருந்த கோட்டாபய | President Get Up And Leave Never Happened History

இதனால், நாடாளுமன்ற அவையில் அமளி ஏற்பட்டது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். எதிர்ப்பு மேலும் அதிகரித்ததால், சபாநாயகர் அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

வரலாற்றில் எப்போதும் நடக்காத சம்பவம்! நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இருந்த கோட்டாபய | President Get Up And Leave Never Happened History

அந்த சமயத்தில் அவையின் காட்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி அவையில் இருந்து செல்லும் விதம் அதில் பதிவாகி இருந்தது.

10 நிமிடங்களுக்கு பின்னர் நாடாளுமன்ற அவை மீண்டும் கூடிய போது, ஜனாதிபதி அவையில் இருக்கவில்லை.

Previous Story

நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள கோட்டா 

Next Story

அவுஸ்திரேலிய வீரர்கள் அதிரடி கருத்து