நஜீப்
12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல்.
சில வாரங்களுக்கு முன்பு வரும் மாகாணசபைத் தேர்தலில் சம்பந்தன்-ஹக்கீம் தனி நபர் நலன் சார்ந்த கூட்டணி ஒன்று அமைய இருப்பது பற்றி பேசி இருந்தோம்.
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பெரும்பாலும் மாகாணசபைத் தேர்தல். 2026 வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்படலாம்.
தமது சமூகங்கள் மத்தியில் சம்பந்தன்-ஹக்கீம் இமேஜ் கனிசமாக சரிவு கண்டிருப்பதால் மு.கா.-தமிழசு கூட்டணி போட்டு அதனைச் சரி செய்யும் ஒரு முயற்சி இப்போது துவங்கி இருக்கினறது.
இதனை அணுராவுக்கு எதிராக வடக்குக் கிழக்கில் நல்ல வியூகமாக எடுத்துக் கொண்டாலும், சமூகரீதியில் பார்க்கின்ற போது இது ஆரோக்கியமான கூட்டணி அல்ல.
அதாவுல்லா முதல்வரானால் கிழக்கில் தமிழர்களுக்கு இரு அமைச்சுக்கள் கிடைக்கும்!
அதாவுல்லா முதல்வராகி தலைவலி தரலாம் என்ற அச்சமும் தலைவருக்கு இருப்பதால் முதுகில் குத்தவும் வாய்ப்புக்கள் உண்டு. வடக்கில் சுமந்திரனுக்கு கடும் போட்டி இருக்கும்.