வஞ்சிக்கப்படும் நமது இளசுகள்

பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் அரசியில் முதிர்ச்சி மட்டம் மிகவும் தாழ் நிலையில் இருக்கின்றது. இதனை சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் தமக்குச் சாதகமாக நன்கு உபயோகித்துக் கொள்கிக்னறார்கள். தற்போது நமது நாட்டில் இருக்கின்ற பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக எடுத்துப்பாருங்கள். அவர்கள் தற்போது தேர்தல்களில் செலவு செய்கின்ற பணத் தொகையை எண்ணிப்பாருங்கள்.

இவர்களின் குடும்பப் பின்னணி அவர்களின் துவக்ககால வாழ்க்கை வசதிகள் எப்படி இருந்தது.! நமது நாட்டு அரசியல்வாதிகள் பலருக்கு சுவிஸ் வங்கியில் கூட பணம் இருப்பது ஒன்றும் புதிய கதையல்ல. இந்தளவுக்கு அவர்கள் எப்படி கோடிஸ்வரர்கள்ஆனார்கள் என்பதனையும் சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி ஜமிந்தரான நமது அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் சரிந்திருக்கின்ற தமது செல்வாக்கை சரி செய்து சமூகத்தின் பலயீனங்களை தமக்குச் சாதகமாக பாவித்துவருவதை நாம் தற்போது நாட்டில் பார்க்கின்றோம்.இதற்கு அவர்கள் நமது இளைய தலைமுறையினரை உபயோகித்துக் கொள்கின்றார்கள்.

நமது இளசுகள் சமூக நலன்கள் பற்றி சந்திப்பது மிகக் குறைவு. அவர்கள் விலை உயர்ந்த மொபைல்களுடன் போடுகின்ற விளையாட்டுக்கள் தான் தமது உலகம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் கிரிக்கட் மட்டைகளும் டெனிஸ் பந்தும்தான் தமது ஒரே பொழுது போக்கு என்று கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் நாம் செய்யக் கூடாது என்று சொல்ல வரவில்லை. சமூகவிடயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களிடத்திலுள்ள பலயீனங்களை பாவித்து இன்று நட்ச்த்திர ஹோட்டலில் உங்களை அழைத்து ஒரு வேலை சாப்பாடு போட்டு விட்டால் அந்த ருசியில் நீங்கள் வாக்கை அவர்களுக்கு கொடுத்து விடுவீர்கள் என்று கருதுகின்றார்கள். நீங்கள் அவர்களின் விசிரிகளாகவும் கையாள்களாகவும் மாறிவிடுவீர்கள் என்பது அவர்கள் கணிப்பு. சமூகத்துக்கு நெருக்கடி வந்த நேரங்களில் தலைமறைவாக நின்றவர்களும் மெளிகளாக இருந்தவர்களும் இப்போது கோடி கோடியாக பணத்தை தமது தேர்தல் வெற்றிக்கு அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்போது அவர்கள் உங்களுக்குத் தருகின்ற பணமும் வசதி வாய்ப்புக்களும் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்பதனை நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? நிச்சயமாக அவை உங்களில் பக்கட்டுக்களிலிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணமே அன்றி வேறில்லை. எனவே சீசனுக்கு வந்து போபவர்களும் நாடாளுமன்றத்தில் ஊமைகள் போல் நின்றிருந்தவர்களையும் நீங்கள் மீண்டும். அங்கே அனுப்பி வைக்க வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். சமூகத்திற்கு பணிபுரிவதற்கு இன்னும் நல்ல தெரிவுகள் நமக்கு இருக்கின்றதா என்றும் யோசித்துப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

கண்டியில் SLMC வாக்குப் பலம்

Next Story

பொதுத் தேர்தல் கண்டி மாவட்டம்