வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்குக்கு பிணை?

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்குக் கடுவலை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

இருவருக்கும் கடுவலை நீதிமன்றத்தால் இன்று (06.12.2022) பிணை வழங்கியுள்ளது.

பிணையில் செல்ல அனுமதி

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்குக்கு பிணை | Vasantha Mudalike Kalveva Sirithamma Bail

இவர்கள் இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மற்றுமொரு வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகிய இருவரும் கடந்த நவம்பர் 17ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, சட்டமா அதிபர் ஆலோசனை கிடைக்கும் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்குக்கு பிணை | Vasantha Mudalike Kalveva Sirithamma Bail

அதன்பின்னர் சட்டமா ஆலோசனையின் பேரில் சிறிதம்ம தேரர் மாத்திரம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Previous Story

ரணில் பசில் அழைப்புக்கள்;!

Next Story

சிறுநீரக மோசடி சம்பவ சந்தேக நபருக்கு விளக்கமறியல்