வங்கியில் அரசு கொள்ளை!

-நஜீப்-

இந்த வாரம் வங்கிகளுக்கு மேலதிக விடுமுறையைக் கொடுத்து நீண்ட ஒரு ஓய்வை அரசு நிதித்துறையில் ஏற்படுத்தி இருக்கின்றது. இது பற்றி ஜேவிபி. யினர் அரசு மக்கள் வங்கியில் வைத்திருக்கின்ற நிரந்தர வைப்புக்களைக் கொள்ளையடிக்கின்ற வேலையைச் செய்யப் போகின்றது என்று ஒரு பக்கம் பரப்புரை செய்து கொண்டு வருகின்றார்கள்.

ஆளும் தரப்பினர் அப்படி ஏதும் நடக்க வாய்ப்பு இல்லை. இந்தக் கதைகளை மக்கள் நம்பக் கூடாது என்று அரசு அவர்கள் தரப்பில் சொல்லி வருகின்றனர். கடன்களை மறுசீர் அiமைப்பு செய்கின்ற ஒரு முயற்சியில் ஓர் அங்கம்தான் இது என்றும் மற்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றார்கள்.

பிரதான எதிரணியில் அதாவது சஜித் அணியில் இருக்கின்றவர்கள், அதவது பொருளாதார விற்பண்ணர்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு  கொடுத்து அதனை நியாயப்படுத்துவதும் தெரிகின்றது. எனவே வழக்கம் போல சஜித் அணியில் இருப்பவர்களில் ஒரு தரப்பினர் ஆளும் தரப்புக்கும் மற்றும் ஒரு தரப்பினர் எதிரணியினர் சார்பிலும் வழக்கம் போல தமது விளையாட்டை நடாத்துவார்கள் என்ற எதிர்பார்க்க முடியும்.

நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பற்றி எரியும் பிரான்ஸ் - அண்டை நாட்டிலும் வன்முறை 

Next Story

'அஸ்வெசும' பகிர்வால் நாடுபூராவில் போராட்டம் ஆளும் தரப்பில் இழுபறி