வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் இந்த மாதம் தனது பதவியை விட்டு விரட்டப்படலாம் என்ற பரபரப்பபான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான விபரம் வருமாறு:
வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உயிருக்கு பயந்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது அவர் நம் நாட்டில் தான் உள்ளார்.
ஷேக் ஹசீனாவை பொறுத்தவரை அவர் இந்திய நாட்டுடன் நெருக்கமான பந்தம் கொண்டவர். அதோடு நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தார். இதனால் இந்தியா – வங்கதேசம் இடையேயான உறவு என்பது மிகவும் நன்றாக இருந்தது.
இதனால் தான் தற்போது பாதுகாப்புக்காக வேறு நாடுகள் இடம் அளிக்க மறுத்த நிலையில் நம் நாடு ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. அதன்பிறகு தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறார். முகமது யூனுஷ் தலைமையிலான அரசு வந்தது முதல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்குமான உறவு சுமூகமாக இல்லை.
இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. அதாவது அங்குள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் நடத்துவது, பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கமாக செயல்படுவதன் மூலம் முகமது யூனுஷ் நமக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இந்தியா வங்கதேசத்தை தீவிரமாக எதிர்க்கவில்லை.
இதனால் அந்த நாடு பிரச்சனையின்றி உள்ளது. இந்தியா நினைத்தால் வங்கதேசத்தை மொத்தமாக முடக்க முடியும். ஆனால் இந்தியா நட்பு நாடு என்ற வகையில் வங்கதேசம் மீது கரிசனம் காட்டி வருகிறது. இது நம் நாட்டின் பெருந்தன்மையை காட்டும் வகையில் உள்ளது.
இந்தியாவிடம் மோதினால் இதுதான் நடக்கும்!
கவனிச்சீங்களா இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதத்தில் முகமது யூனுஷ் வங்கதேசத்தில் இருந்து விரட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி அவரது ஆட்சியை கவிழ்த்தனர்.
அதன்பிறகு மாணவர்கள் தான் புதிய ஆட்சியை அமைப்பதாக கூறினர். ஆனால் அனுபவசாலி வேண்டும் என்ற நிலையில் தான் முகமது யூனுஷ் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு அவரது தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் அவரது அரசில் இடம்பெற்றுள்ள போராட்டக்குழுவினரின் தலையாய நோக்கம் என்பது வங்கதேசத்தின் அரசியலமைப்பை மாற்றம் செய்வது தான்.
அதாவது வங்கதேசத்தின் அரசியலமைப்பை நீக்கிவிட்டு அதற்கு பதில் Revolutinary government அமைப்பதாகும். இதனை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது யூனுஷ்க்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதோடு டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் முகமது யூனுஷ் நிறைவேற்றவில்லை. இதையடுத்து மீண்டும் 15 நாட்கள் அதாவது ஜனவரி 15ம் தேதிக்குள் தற்போதைய அரசியலமைப்பை நீக்கி புதிய விதிகளுடன் ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளனர்.
ஆனால் முகமது யூனுஷ் அதனை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் வெடிக்கலாம். அதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா போல் முகமது யூனுஷ் நாட்டில் இருந்து விரட்டப்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இல்லாவிட்டால் முகமது யூனுஷ் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் வேறு யாராவது இடைக்கால அரசின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்படலாம். இது நடந்தால் மீண்டும் முகமது யூனுஷ் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது.
எப்படியானாலும் முகமது யூனுஷ் இந்த மாதம் வங்கதேசத்தில் இருந்து விரட்டப்படலாம் என்று பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று…