வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு

ஷேக் ஹசீனா நிலைமை என்ன?

கடந்த ஆண்டு நடந்த GenZ போராட்டத்தால் வங்கதேசத்தி ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட்டது. உயிருக்கு பயந்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.

இந்நிலையில் வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வங்கதேசத்தின் 13வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடைபெறும் என, அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உத்தீன் அறிவித்துள்ளார்.

முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்கள் குறித்த தேசிய வாக்கெடுப்பும் அதே நாளில் நடத்தப்படும் என அவர் நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாகத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மாணவர் போராட்டங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் தலைமையில் தற்போது இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது. இவர் தேர்தலுக்குப் பிறகு பதவி விலகுவார்.

மூன்று முறை பிரதமராக இருந்த கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கலீதா ஜியா உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகன் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளாக பிரிட்டனில் நாடு கடந்து வாழ்ந்து வருகிறார்.

அவர் இன்னும் திரும்பவில்லை. அதேபோல ஷேக் ஹசீனா இந்த தேர்தலில் களமிறங்க திட்டமிட்டிருக்கிறார். வெற்றி பெற்றால் நாடு திரும்பலாம் என்றும் அவர் எதிர்பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

இந்த மாதிரி ஒரு சீரியல் கில்லரை கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க | 17 Mur*ders..