லால் காந்த கதை கேளுங்கள்!

-நஜீப்-

நன்றி ஞாயிறு தினக்குரல் 03.08.2025

திறந்த மனதுடன் எதனையும் சிந்திக்க-சிரிக்கப் பேசுகின்ற  அமைச்சர் லால் காந்த. அண்மையில் கண்டியில் மக்கள் பணிமனையொன்றை திறந்து வைத்தார்.

அங்கு பேசும் போது இது கட்சிக்காரியாலயம் அல்ல. எனவே கட்சி சின்னம் கொடிகளை இங்கிருந்து அகற்றிவிடுங்கள் என கட்டளையிட்டார்.

மேலும் விரைவாக இந்தக் காரியலம் மூடப்பட வேண்டும் என்பது தனது விருப்பம் என்றார். முறையாக மக்களுக்கு சேவைகள் நடக்குமாக இருந்தால் எவரும் இங்கு வந்து வீனே அழைய வேண்டி வராது என்றும் சுட்டிக்காட்டினார்.

மற்றுமொரு இடத்தில்… தன்னைப்பற்றி புத்தகம் எழுதப் போவதாக ஒருவர் வந்து சந்தித்தார். அவரிடம் இதற்கு முன்னரும் இப்படி ஒருவர் வந்தார்.

அவர் புத்தகம் எழுதாமலே மரணித்துவிட்டார். எனவே எச்சரிகை என்றதுடன் என்னைப்பற்றி புத்தகம் எனக்கு அவசியமில்லாத ஒன்று.

புத்தகம் எழுதுவதாக இருந்தால் அது உங்கள் வேலை. ஆனால் என்னிடம் வந்து எந்தத் தகவலும் கேட்க கூடாது. நான் முன்னவருக்கும்  இதனைத்தான் சொல்லி இருந்தோன் என்றார் லால்.

Previous Story

இரு நாடுகளுக்கு உளவு பார்த்த டபுள் ஏஜென்ட்! அஷ்ரப் மர்வான்

Next Story

ஆழ்கடலில் யாருடைய ஆட்சி?