-நஜீப்-
நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல்
நமது ஊடகக்காரர்களுக்கு ஜனவரி கருப்பு மாதம். நமது காலத்தில் செல்வாக்கான பத்திரிகையாளர்களில் விக்டர் ஐவனுக்கும் லசந்தவுக்கும் முதன்மை இடம். இந்த இருவருடனும் நமக்கு இருந்த உறவு பற்றி முன்பு சொல்லி இருந்தோம்.
இது லசந்த நீராகவும் நெருப்பாகவும் இருந்தது பற்றிய குறிப்பு. ஒரு முறை அவரையும் அவரது முதல் மனைவி ரெனோவையும் இரண்டுக்கு இரண்டு (2×2) கம்பில் ஆணி அடித்துத் தாக்கினார்கள். குற்றவாளிகளும் கைதாகி வழக்கு இறுதிக்கட்டத்தில் இருந்தவேளை ஒருநாள் இருவர் லசந்தவை சந்தித்து, நாம்தான் உங்களைத் தாக்கியவர்கள்-ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர்.
இப்போது எமது தொழில்களும் பறிபோய் குடும்பங்களும் தெருவில் என்று கெஞ்ச அவர்களை லசந்த மன்னித்தார். சந்திரிக்க தன்னை பிரான்ஸ்-சோபோன் பட்டதாரி என்று சொல்ல அது பொய் என லசந்த சன்றிதழ் கோட்க, லசந்த வீடு யுத்த தாங்கி மூலம் தாக்கப்பட்டது.
நெருப்புடன் விளையாட்டு எனத் தெரிந்து கொண்டும் அவர் பிரேமதாச, சந்திரிகா மற்றும் ராஜபக்ஸாக்களுடன் மோதினார். அதனாலே அவர் உயிரும் போனது. ஒரு சமயம் தன்னை மஹிந்த தூசனத்தில் ஏசிய வார்த்தைகளை தனது ஞாயிறு ‘ஹிருதின’ பத்திரிகையில் (அம்மட…) தலைப்பாகப் போட்டு செய்தி எழுதி இருந்தார்.