-நஜீப்-

நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல்
கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் விவாதம்கோரி அதனை ஹக்கீம் பெற்றுக் கொண்டார். ஆனால் அங்கு நடந்த விவாதத்தின் போது அவர் நன்கு வாங்கிக்கட்டிக் கொண்டார்.
தமக்கு அரசியல் ரீதியில் ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவை சரிசெய்ய அவர் ரோஹிங்கிய முதுகில் ஏறி சவாரிசெய்ய முட்படுவது போல நமக்கும் தெரிந்தது.

அதே நேரம் அவர் அணியில் பேசிய முஜீபர் ரஹ்மான் மற்றும் அர்ஷத டி சில்வா என்பவர்களின் உரை யதார்த்தமாக இருந்தது. ஆளும் தரப்பு முனீர் முலவ்பர் மற்றும் அர்க்கம் இல்யாஸ் வாதங்களும் ஆரோக்கியமாகவும் யதார்த்தமாகவும் இருந்தன.

ரோஹிங்கிய அகதிகளை வைத்து முஸ்லிம்களின் உணர்வைத் கிளரி ஆதாயம் தேட ஹக்கீம் மேற்கொண்ட முயற்சி அங்கு வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதே நேரம் ஒரு சமயம் முஸ்லிம் சமூகத்துக்கு நியாயம் பேச இந்திய போன இடத்தில் ஹோட்டலில் ஹக்கீம், காரியப்பர், சல்மான் போன்றவர் அங்கு எப்படி நடந்து கொண்டார்கள்?
அங்கு என்ன நடந்தது என்பது அவர்களது மனட்சாட்சி அறியும். அவசியப்பட்டால் அதனையும் பேசலாம்.!





