ரூபாய் காசும் ரணில் பேச்சும்!

-நஜீப்-

தற்போது நமது பணமாகிய ரூபாய் காசு உலக அரங்கில் செல்லாக்காசாகி வருகின்றது. இது ஆட்சியாளர்கள் நமது பொருளாதாரத்தை வழிநடாத்திக் கொண்டு வந்த ஒழுங்கு முறையால் நடந்த அழிவு. ஆட்சியாளர்களே நாம் கடந்த காலங்களில் விட்ட தவறுதான் நெருக்கடிகளுக்குக் காரணம் என்று சொல்லி பந்தை அடுத்தவர் பக்கம் தள்ளி விளையாடி வருகின்றார்கள்.

இதே நாடாளுமன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பேசும் போது நாட்டில் இந்தளவுக்குப் பொருளாதாரம் சீரழிந்து போக நல்லாட்சியே அரசே காரணம் என்று சாடி இருந்தார்.

அவர் கதைப்படி அந்த நாசகார  அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்ற பிரதமருக்கு இதே ராஜபக்ஸாக்களும் அவர்களது மொட்டுக் கட்சியினரும் பதவி உயர்வு கொடுத்து ஜனாதிபதியாக நியமனம் செய்திருப்பது என்ன அரசியல் நாகரிகம் என்று கேட்க வேண்டி இருக்கின்றது.

இதற்கிடையில் நமது தற்போதய ஜனாதிபதி ரணில் அரசியல் பொருளாதார விவகாரங்களில் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவிக்கின்ற கருத்துக்கள் நகைப்புக்கிடமாக மாறி வருகின்றது.

இதனை மாவட்ட அபிவிருத்தி சபைகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தும், அதற்கு ஜனாதிபதி செயலகம் கொடுத்த விளக்கமும் சிறப்பான உதாரணமாக அமைந்திருக்கின்றது. எனவேதான் ஜனாதிபதி ரணில் வார்த்தைகளை ரூபாவுக்கு சமனாக நாம் பார்க்கின்றோம்.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 04.12.2022

Previous Story

முன்னாள் நீதவானுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

Next Story

ஒரே நபரை, ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்ட இரட்டை சகோதரிகள்