ராஜித அதிரடி ஆட்டம்

-நஜீப்-

இன்று சுகாதார அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்கெல மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உரிமுறையில் விலை மனுக்கோராமல் தமது கையாட்களுக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய அவர் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். அப்படி இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் மிகவும் தரக்குறைவாக இருப்பதால் தற்போது டசன் கணக்கான நோயாளிகள் மரணமடைந்திருக்கின்றார்கள்.

இது பற்றி நாடாளுமன்றத்தில் நோயாளிகள் என்றால் அவர்களில் சிலர் இறக்கத்தான் செய்வார்கள் அது இயல்பானது என்று கெஹெல்லிய கருத்துத் தெரிவித்தது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிழம்பி இருக்கின்றது. அத்துடன் கெஹெல்லிய ரம்புக்கெலவின் நடவடிக்கைகளை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்தன கடுமையாக விமர்சித்திருக்கின்றார். அ

வர் இப்படி நாடாளுமன்றத்தில் விமர்சித்த போது அதற்கு எதிராக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எவரும் வாய்திறக்கவில்லை. இவரை சுகாதார அமைச்சராக நியமனம் செய்வது பற்றி ஒரு கதை இருக்கின்றது.

அத்துடன் சில தினங்களுக்கு முன்னர் ஒரு வைபவத்தில் ராஜிதவைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஸ தனது மிகப் பெரிய நண்பர் ராஜித் என்றும் சுட்டிக் காட்டி இருக்கின்றார். அத்துடன் இவர் பசில் சகாவும் கூட.

நன்றி: 23.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பீரிக்ஸ் மாநாட்டில் புடின் இல்லை.!

Next Story

2024ல் புடின் கொலை-பாபா!