ராஜாக்கள் போட்ட கட்டளை!

நஜீப்

ஜனாதிபதி ரணில் தரப்பினருக்கும் மொட்டு அணிக்கும் இடையில் நடக்கின்ற பல நிகழ்வுகள் நாடகமாக இருந்தாலும் சில மோதல்கள் உண்மையாகத்தான் தெரிகின்றது. அண்மையில் அணுராதபுரம் கலவௌத் தொகுதியில் மொட்டுக் கட்சியினர் தமது முதலாவது தேர்தல் பரப்புரையைத் துவங்கி இருந்தார்கள்.

Namal Rajapaksa (@RajapaksaNamal) / X

அந்தக் கூட்டத்தில் ராஜபக்ஸாக்களும் வருகை தந்திருந்தனர். தற்போது முக்கிய பதவியில் இருக்கின்ற அமைச்சர் சேமசிங்ஹ அங்கு பிரசன்னமாகி இருக்கவில்லை. அது பற்றி கேட்ட போது தனக்கு அதற்கு அழைப்புக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

அவர் ஜனாதிபதி ரணில் விசுவாசி கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் ராஜபக்ஸ விசுவாவாசி எஸ.எம்.சந்திரசேன. அதனால்தான் மேசிங்ஹவுக்கு அந்தக் கவணிப்பு. இன்னும் சில நாட்களில் மாத்தரையில் காஞ்சன விஜேசேக்கர தெற்கு மாத்தரையில் ரணிலின் முதலாகவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார்.

அந்தக் கூட்டத்தில் தமது கட்சிக்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று ராஜாக்கள் கட்டளையாம்! இதனால் காஞ்சன கலங்கி நிற்க்கின்றதாம்.!

நன்றி: 02.06.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கருத்துக்கணிப்பு எப்படி நடக்கிறது? வெவ்வேறு முடிவுகள் ஏன்?

Next Story

சாடிக்கு ஏற்ற மூடி!