ராஜபக்ஸாக்களிடையே நடக்கும் பனிப் போரும் சகோதரத்துவ நகர்வும்!

யூசுப் என் யூனுஸ்

இந்த ராஜபக்ஸாக்களிடையே தற்போது நடந்து கொண்டிருக்கின்ற பனிப்போர் மற்றும் இணக்கப்பாட்டு அரசியல் நகர்வுகள் பற்றிப் பேசுவதற்கு முன்பு ராஜபக்ஸாக்கள் அரசியல் பிரவேசம் மற்றும் மெனமூலன பற்றியும் சில தகவல்களை வாசகர்களுக்குச் சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். டி.ஏ. ராஜபக்ஸ அல்லது டொன் அல்விஸ் ராஜபக்ஸ (1906 நவம்பர் 5ம் திகதி) தெற்கு ஹம்பந்தோட்டை மெதமூலன என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவரது தந்தை டொன் டேவிட் ராஜபக்ஸ என்பவர் ஒரு கிராமசேவகர். மத்தியூ ராஜபக்ஸவின் மூத்த சகோதரர் டொன் மத்தியூ ராஜபக்ஸ அப்போதய இலங்கை அரச சபையில் ஹம்hந்தோட்;டைப் பிரதிநிதியாக இருந்தார். இவரிடம் தான் டி.ஏ.ராஜபக்ஸ அரசியல் பற்றித் தெரிந்து கொண்டார். மத்தியூ ராஜபக்ஸ இறப்பினால் அந்த இடத்துக்கு பொலியத்த தொகுதியில் டி.ஏ.ராஜபக்ஸ 1947ல் ஐ.தே.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று ஹம்பாந்தோட்டையில் இருந்து பொலியத்த பிரிந்து தனித் தொiகுதியாயிருந்தது.

1951ல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாநாயக்கா வெளியேறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் துவங்கிய போது டி.ஏ.ராஜபக்ஸாவும் அவர்களுடன் இணைந்து கொண்டார். அதன் பின் 1956ல் நடைபெற்ற தேர்தலில் பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று 18 பேரைக் கொண்ட அமைச்சரவையை அமைத்தது. ஆனால் அதில் இந்த ராஜபக்ஸ இடம் பெற்றிருக்கவில்ல. 1959ல் பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் டப்லியு தகநாயக்க தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இவர் விவசாய  காணி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இப்படித்ததான் மொதமூலன அரசியல் பிரவேசம் துவங்குகின்றது.

இந்த டி.ஏ.ராஜபக்ஸாவுக்கு சாமல், ஜெயந்தி, மஹிந்த, சந்திரா, கோட்டாபய, பசில், டட்லி, என்று பிள்ளைகள். அவர்களில் இருவர் பெண்கள். இன்று அவர்களில் அனேகமானவர்கள் ராஜபக்ஸாக்களினால் அரசியல் ரீதியான பதவிகளில் அமர்த்தப் பட்டிருக்கின்றார்கள். அவர்களின் பதவிகள் பற்றி நாம் இங்கு பேச வேண்டியதில்லை அது உலகறிந்த கதை.

சந்திரிக்க தனது இரு தவணைக் காலத்தை நிறைவு செய்த பினனர் தனது கட்சி ஜனாதிபதி வேட்பாளாராக மஹிந்த ராஜபக்ஸாவைத் தெரிவு செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு முறை கண்டி ஜனாதிபதி மளிகையில் நாம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவைச் சந்தித்த போது இந்தத் தெரிவில் அவர் விருப்புடையவராக இருக்கவில்லை என்தனை அவரிடத்தில் நமக்குக் காண முடிந்தது. என்றாலும் ஜே.ஆர் ஆர். பிரேமதாசாவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியைக் கொடுத்ததைப் போல் ஒரு நிலையில்தான் அன்று சந்திரிக்க அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டி வந்தது.

அதே போன்று வெற்றி பெற்ற பின்னர் இருவருக்கமிடையில் பலத்த அரசியல் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. பின்னர் 2015ல் மைத்திரியை களத்தில் இறக்கி சந்திரிக்க மஹிந்தவுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்ததும் தெரிந்ததே.

இப்போது சமகால அரசியலுக்கு வருவோம். மைத்திரி நல்லாட்சி நடாத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ராஜபக்ஸாக்கள் புதுக் கட்சி துவங்கி அவருக்குப் பெரும் சவால்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்சியைத் தோற்றுவிப்பதில் அவர்களது ஆறாம் பிரவி பசில்தான் அதன் கோட்பாதர். ஆறாம் பிரவி என்பதை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். டி.ஏ.ராஜபக்ஸாவின் ஆறாவது பிள்ளையை அதாவது ஏழு தலையைத்தான் அப்படி அழைத்திருக்கின்றோம். கட்சி துவங்கிய குறுகிய காலத்துக்குள்ளே அது இனவாத்துடன் பேரின மக்கள் மத்தியில் வைரலாகி மைத்திரி-ரணில் நல்லாட்சியை ஆட்டம் காண வைத்தது. அவர்களை மட்டுமல்ல இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் வாழ முடியாத ஒரு சூழ்நிலையும் தோற்றியது.

அதனைத் தொடர்ந்து நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸா தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் பதவிக்குப் போட்டியிட முடியாது என்பதால் தனது சகோதரர் கோட்டாபேய ராஜபக்ஸாவுக்கு வேட்பு மனுவைக் கொடுக்க வேண்டி வந்தது. அந்த நாட்களில் நாம் எழுதிய ஒரு கட்டுரையில் மஹிந்த இந்தத் தீர்மானத்தை பூரண விருப்பத்துடன் எடுக்கவில்லை என்றாலும் அதற்கிடையில் பௌத்த விகாரைகளில் ஊடாக கோட்டாபேய ராஜபக்ஸா பேரினத்தார் மத்தியில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி இருப்பதால் மஹிந்த ராஜபக்ஸ ஆளைத் தனது தெரிவாக நிறுத்த வேண்டி வந்தது. அன்று இவரது தெரிவுக்கு எதிரான வாசு போன்றவர்கள் போர்க் கொடி தூக்கியதும் இந்தப் பின்னணியில்தான் என்பதனை எத்தனை பேர் அறிவார்கள். மஹிந்த ராஜபக்ஸ தனது மூத்த சகோதரர் சாமலைத்தான் தனது தெரிவாக எண்ணி இருந்தார்.

பேரித்தாரின் தனிப்பெரும் செல்வாக்கில் கோட்டாபேய வெற்றி பெற்றார். இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்கள் அவருக்குத் தனது ஐந்து சதவீத வாக்குகளைக் கூட அன்று வழங்கவில்லை என்பது எமது கணக்கு. இப்படி பதவிக்கு வந்த கோட்டா தனது அரசாங்கத்தை இராணுவ மயமாக்குவதில் அதாவது ஓய்வு பெற்ற தனக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளை உயர் பதவிகளில் நிறுத்திக் கொண்டார். கோட்டா உற்பட இந்த அதிகாரிகளுக்கு அரசியல்துறையில் பரீட்சதம் இல்லை. அதனால்தான் பிழையான தீர்மானங்களை எடுத்து நாடு இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

ஆதிகாரத்துக்கு வந்ததும் தனக்கும் தனது சகோதரர்களுக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் அதிகாரங்களை எல்லை மீறி வைத்துக் கொள்ள 20வது திருத்தத்ததை நிறைவேற்றிக் கொண்டார் கோட்டா. அதுதான் இன்று இலங்கை மக்களுக்கும் குறிப்பாக ராஜபக்ஸாக்களின் அரசியல் எதிர்காலத்துக்கும் பெரும் ஆபத்;தாக அமைந்து விட்டது.

கோட்டா செயல்பாடுகள் அப்படிப் போய் கொண்டிருக்கின்ற போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸா ஜனாதிபதி கோட்ட நடவடிக்கைகள் தொடர்ப்பில் துவக்க முதலே திருப்தியில் இருக்கவில்லை என்பதனை நாம் தனிப்பட்ட ரீதியில் அறிவோம். அது பற்றி அப்போது பேசியும் இருக்கின்றறோம். துவக்கத்தில் மஹிந்த-கோட்hவுக்கு இடையே ஒரு மெல்லிய பனிப்போர் இருந்து வந்தது. இந்த இடத்தில் அனுபவம் மிக்க மஹிந்த மிகவும் மென்மைப் போக்கை கடைப்பிடித்து வந்தார். காரணம் கடும் போக்கு பௌத்த தேரர்களை ஜனாதிபதி ஜீ.ஆர். தனது வலைக்குள் போட்டுக் கொண்டிருந்ததால் பிரதமருக்கு வேறு மார்க்கங்கள் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் ஏழுதலை பசில் அட்டகாசங்கள் நாட்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஜனாதிபதி பெரும்பாலும் பசிலிடத்தில்தான் ஆலோசனைகளைப் பெற்று வந்தார். பல விடயங்களில் தன்னிச்சiயாக அதிகாரிகளை நம்பித் தீர்மானங்களை எடுத்திருந்தார்.  இந்தப் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஸ புதல்வர்கள் கேலிக்கைகளில் ஈடுபட்டது மட்டுமல்லாது அதிகார பலத்தை பாவித்து பெரும் தொகையான அரச பணத்தை தமது சொந்தப் பணம் போல் பாவித்து வீண் விரையம் செய்தும் வந்தார்கள். உதாரணம் ரெக்கட் அனுப்பிய கதை.

நாட்டில் நடந்த பல கொலைகள் போர்க் குற்றங்கள் இன்றும் ராஜபக்ஸாவின் கணக்கில்தான் சர்வதேசம் வரவு வைத்திருக்கின்றது. அதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கு மாறாக சண்டித்தனம் பண்ணித்தான் காரியம் சாதிக்கலாம் என்று நம்பினார்கள். அதேபோன்று தமக்கு வேண்டியவர்களை நீதி மன்றக் குற்றங்களில் இருந்து தப்பவைத்து நீதித்துறையையே கேலிக் கூத்தாகவும்  மற்றி அமைத்தார்கள்.

நாடாளுமன்ற அனுமதிகூட இன்றி அரச உடமைகளை வெளிநாடுகளுக்கு விற்றது மட்டுமல்லாது அந்த அரசு நிறுவனங்களுடன் உள்நாட்டு மக்களுக்குத் தெரியாது இரகசிய உடன்படிக்கைகளைக் கூட ராஜபக்ஸக்கள் செய்து கொண்டிருந்தார்கள். அரச அபிவிருத்தித் திட்டத்தில் பெரும் தொகையான பணம் இன்று காணாமல் போய் இருக்கின்றது என்பதனை அதிகாரிகளே பகிரங்கமாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அரசின் பிழையான அணுகுமுறையால்தான் நாட்டுக்கு இந்த நிலை என்பதனை விட ராஜபக்ஸாக்களின் அட்டகாசத்தால்தான் நாடு வங்குரோத்து நிலைக்குப் போய் இருக்கின்றது என்பது யதார்த்தமானது.

இப்போது ராஜபக்ஸாக்களிடையே நடக்கின்ற பனிப்போர் பற்றிப் பார்ப்போம். நாட்டில் தற்போது நடந்திருக்கின்ற இந்த நெருக்கடிகளுக்கு அவர்களில் எவரும் பொருப்பேற்பதாக ஒத்துக் கொள்ளவில்லை. நெல் உற்பத்தி விவகாரத்தில் தான் பிழையான முடிவை எடுத்து விட்டதாக ஜனாதிபதி ஒரு முறை கூறி இருந்தார். விவசாயத்துறை பேராசியரியர்கள் விவசாயிகள் வீதிக்கிறங்கி பேராட்டம் நடத்துகின்ற நேரத்தில் கூட ஜனாதிபதி யார்த்தத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்ளவில்லை என்பது தெரிந்ததே.!

இன்று மக்கள் பட்டினிச்சாவில் இருக்கின்ற நேரத்தில் அவர் தவறை ஒத்துக் கொள்வதனால் என்னதான் ஆகப் போகின்றது.? தற்போது தான் ஒரு தோற்றுப் போன ஜனாதிபதியாக இருக்கின்றேன். அதனால் வெற்றி பெற்ற ஒருவனாகத்தான் நான் பதவியில் இருந்து வெளியேற வேண்டும். எனவே என்ன எதிர்ப்பு வந்தாலும் இரண்டு வருடங்கள் அதிகாரத்தில் இருந்து சாதனை புரிந்து விட்டுத்தான் போவேன் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கின்றது. தனக்கு ஏழு மூளை என்று வந்த அவரது சகோதரரே இன்று ஓட்டம் எடுத்திருக்கின்ற நேரத்தில் அரசியலே புரியாத இந்த ஆள் என்னதான் பண்ண முடியும்.

சரி இன்னும் இரண்டு வருடங்கள் இவர் அதிகாரத்தில் இருக்கின்றார் என்றதான் வைத்துக் கொள்வோம். இந்த நாட்டில் இருக்கின்ற ஒரு சிறு குழந்தையாவது இவர் சாதிக்கப்போகின்ற கதையை ஏற்றுக் கொள்ளுமான என்று எண்ணிப்பாருங்கள். என்ன பைத்தியம் என்றுதான் சொல்வார்கள். (மொன பிஷ்சுத) ஆனால் ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பதைத்ததான் ஆளும் தரப்பில்லுள்ள அரசியல் குற்றவாளிகளும் விரும்புகின்றார்கள் அத்ற்குக் காரணம் அவர்கள் பிழைப்பு ஜனாதிபதி அதிகாரத்தால்தான் பாதுகாக்கப்பட முடியும் என்ற எதிர்பார்ப்பு.

இப்படி நாட்டை நெருக்கடிக்கு ஆளாக்கிய விவகாரத்தில் ராஜபக்ஸாக்களிடையே குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸாவிடத்தில் பெருத்த மனவர்த்தம் இருக்கின்றது. அவர் பல சந்தர்ப்பங்கள் தனது கோபத்தை தனது மூத்த சகோரர் சமால் ஊடாக ஜனாதிபதி கோட்hவுக்கு  வெளிப்படுத்தியும் இருக்கின்றார். அண்மை நாட்கள் வரை ஜனாதிபதி பிடிவாதமாகத்தான் நடந்து கொண்டு வந்திருக்கின்றார். இந்த நெருக்கடி நிலையில் உண்மையிலே வெளியே போய் இருக்க வேண்டியது ஜனாதிபதி கோட்டாதான் ஆனால் போகவேண்டி வந்தது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்குத்தான். தனது பிள்ளைகளுக்கு அரசியல் எதிர்காலத்தை ஜனாதிபதி ஜீ.ஆர். இல்லாமல் செய்து விட்டார் என்ற ஆதங்கம் அவருக்கு நிறையவே  இருக்கின்றது.

இன்று  ஜனாதிபதியை ஒரு வன்முறையாளன் போல் நடந்து கொள்ள ஆலோசனை வழங்கிய டாக்டர் பாதெனிய மற்றும் ஞானசாரத் தேரர் போன்றவர்களைக் கண்டு கொள்ள முடியவில்லை. நமக்கத் தெரிந்து பல பேரினத்து நண்பர்கள் வீடுளில் இருந்த ராஜபக்ஸக்களின் புகைப்படங்களை அவர்கள் கிழித்துக் குப்பையில் எறிந்திருக்கின்றார்கள் அல்லது தீயிட்டுக் கொழுத்தி இருக்கின்றார்கள். ராஜபக்ஸாக்களை மக்கள் துரோகிகள் என்றுதான் பகிரங்கமாகப் பேசி வருகின்றார்கள்.

மக்கள் மத்தியில் தமக்கு இருக்கின்ற எதிர்ப்புக்களை எப்படி சமாளித்த மீண்டும் அரசியல் களத்துக்கு வருவது என்பதில்தான் அவர்கள் அவதானம் தற்போது இருக்கின்றது. நமக்கு வருகின்ற தகவல்படி ஜனாதிபதி இந்தப் பதவிக் காலம் முடிந்ததும் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் நான் இன்னும் அதிகாரத்தில் இருந்துவிட்டுத்தான் போவேன் என்று இருப்பவர். உரிய காலத்தில் நடக்க இருக்கின்ற தேர்தல்களைக் கூட நடத்துவரா என்ற சந்தேகம் நமக்கு இருக்கின்றது.

உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடக்க வேண்டி இருக்கின்றது. ஆனால் அதற்கும் அதற்கு பின்னய தேர்தல்களுக்கும் ஆளும் தரப்பு ஆப்ப வைக்க நிறைய இடமிருக்கின்றது. எனவே தேர்தலுக்கு சர்வதேசத்தை நாட வேண்டி வரும் என்று நாம் நம்புகின்றோம். இந்தியா கூட இதில் ஆர்வமாக இருப்பதாக நமக்கத் தெரியவில்லை இங்கு ஒரு குழப்பமான நிலை இருப்பதுதான் இந்தியாலின் விருப்பமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்று மாகாணசபைத் தேர்தல்களுக்கான அழுத்தங்களைக் கொடுக்க இந்தியாவுக்கு சாதகமான நிலை இருக்கும் போது அது கண்டு கொள்ளமல் இருந்து வருகிறதது. ராஜபக்ஸாக்கள் இந்த நிலையில் எப்படித் தேர்தல் நடத்ததுவது என்ற கேட்பற்கும் நிறையவே இடமிருக்கின்றது.

அதிகாரம் நம்மிடமிருந்து கை நழுவிப் போய்க் கொண்டிருப்தில் ராஜபக்ஸாக்களிடத்தில் ஒருவரை ஒருவர் கை நீட்டிக் கொள்ளும் நிலை இருந்தாலும் அவர்கள் அதனை மறைத்துக் கொண்டு மீண்டும் அதிகாரத்துக்குக் வருவது எப்படி என்றுதான் இன்று காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். அதில் முக்கிய ஒரு நகர்வுதான் ரணிலைப்; பிரதமராக நியமித்தது.

பௌத்த தேரர்கள் கருவை ஜனாதிபதியாக்கவும் மொட்டுத் தரப்பில் உள்ள ஒரு குழு டலஸ் அலகப் பெருமாவை பிரதமராக்கவும் முயன்றது. இந்த நேரத்தில்தான் ஜனாதிபதி கோட்டா சஜித், பொன்சேக்க என்று ஆள் தேடித் திரிந்து கொண்டிருந்தார். இதன் உண்மையான கதை என்னவென்றால் இப்படி எல்லாம் ஆட்களை உசுப்பேற்றிவிட்டு-ஆசைகளை வளர்த்தவிட்டு அவர்கைக் கைவிட்டு விட்டார்.  அவர்களுக்கு பிரதமர் பதவியைக் கொடுப்பதை மஹிந்தவும் பசிலும் கடுமையாக எதிர்த்தனர். அது ஆபத்து என்பது அவர்கள் ஜனாதிபதியிடத்தில் முன்வைத்த ஆலோசனை. பெரும்பாலான மொட்டு-ஆளும் தரப்பு உறுப்பிர்களும் சஜித், பொன்சேக்கா தெரிவை ஏற்கவில்லை. ராஜபக்ஸாக்ள் குடும்பம் ஒட்டு மொத்தமாக ரணிலுக்குப் பச்சைக் கொடி காட்டி இருந்தது.

தற்போது பசில் பதவி விலகி தம்மிக்க பெரோரா வருவது கூட ஒரு அரசியல் பின்வாங்கல் மட்டுமே. பசில் அதிகாரத்தில்-அரசியலில் இருப்பதால்தான் இந்த 21 விவகாரம் முக்கியத்துவம் பெறுகின்றது. தான் ஒதுங்கிக் கொண்டால் 21 விவகாரம் பிசுபிசுத்துப் போகும் மீண்டும் பதுங்கி இருந்து பாயலாம் என்பதாலோ, அல்லது 21 நிறைவேறி தனது அரசியல் இருப்பு கேள்விக்குறியாகலாம் எனவும் அவர் முன் கூட்டி ஒதுங்கி இருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

நன்றி:12.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அரசாங்கத்தை மாற்றாமல் தீர்வு இல்லை- -மைத்திரி திட்டவட்டம்

Next Story

நாட்டில் என்ன நடக்கின்றது? யார்; சொல்வதை நம்புவது?