ராஜகுமாரி: உறங்கும் மலையகம்!

-நஜீப்-

சுதர்ம நெத்திகுமரா  மோதிரக் களவு ஒன்று தொடர்ப்பில் கொடுத்த ஒரு தொலைபேசிக்காக வெலிகட பொலிசுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட பதுள்ளை தெமோதர நாவலவத்த ஆர்.ராஜகுமாரி விடயத்தில் மலையகத் தமிழ் தலைமைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை விவகாரத்தில் திருப்தி கொள்ள முடியாது.

சிறைக் கைதிகள் நலன் காக்கும் அமைப்பைச் சேர்ர்ந்த சுதேஸ் நந்திமல் என்பவர் இது தொடர்பாக பேசும் வரை இந்த மரணம் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. ரிசாட் பதுதீன் விவகாரத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இதற்குக் கிடைக்கவில்லை. அது அன்று இருந்த அரசியல் பின்னணியிலான நிலை-பரப்புரை. ராஜகுமாரியைத் தாக்கிய ஏழு பொலிசாரில் இரு பெண்களும் இருக்கின்றார்கள்.

ஆனால் முறைபாடுகள் ஏதும் மரணம் வரை பொலிஸ் பதிவுகளில் இல்லை.! வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் போது அவர் மரணம் நடந்திருக்கின்றது. உடல் பூராவும் காயங்கள். பதுள்ளையில் வடிவேலு நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். அவருக்கும் ஜனாதிபதிக்கும் தற்போது நெருக்க உறவு. ராஜகுமாரி கொலை இந்திய சமூகத்திற்கு கொடுக்கபட்ட 200 நூற்றாண்டு நினைவுப் பரிசா இது.

நன்றி:28.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 முதலில் வருவது எந்தத் தேர்தல் ?

Next Story

ஜோர்டான்-செளதி  காதல் ஏன் விவாதமாகிறது?