ரஸ்யாவின் நவீன நாடகம்!

-யூனுஸ் என் யூசுப்-

சமகால உலக அரசியல் மற்றும் போர் யுக்திகளில் மிகப் பெரிய ஒரு நாடகத்தை நடாத்தி தனது எதிரிகளுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது ரஸ்யா. கடந்த வாரம் உலக அரசியலில் மிகவும் பரபரப்பாக இருந்த ஒரு செய்திதான் பிரிகோசினின் வக்னர் தனியார் படைகள் மொஸ்கோவை நோக்கி படையெடுக்கின்றார்கள்.

Putin Vs. Wagner | Editorial Cartoons | greenevillesun.com

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது. புட்டின் விமானத்தில் ஏறித் தப்பியோடி விட்டார். அடுத்த தலைவர்களும் விமானத்தில் ஏறித் தலைமறைவாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஒரு கதையை நாம் பார்த்தோம் கேட்டோம். புட்டினுக்கு இப்படியெல்லாம் நடக்கப் போகின்றது என்பது எமக்கு ஒரு மாதங்களுக்கு முன்னரே தெரியும்> இப்படி அமெரிக்க சொல்லி இருந்தது. புட்டினுக்கு எதிராக மொஸ்கோ வருகின்ற 25000 ஆயிரம் படையினருக்கு மக்கள்  தெருவில் வந்து வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

Putin threatens 'harsh retribution' for Wagner group's mutiny

அவர்களை மக்கள் வரவேற்க்கின்றார்கள். இப்டியான செய்திகளையும் பார்க்க முடிந்தது. அந்த செய்திகள் வந்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள்லேயே கதை தலைகீழாக மாறியது. புட்டின் வெக்னர் படைகளை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவியை வைத்து பேச்சு வார்த்தையில் கட்டுப்படுத்தி விட்டார் என்றும் சொல்லப்பட்டது.

Mutiny in Russia: Putin vows to punish 'traitors' amid mercenary group Wagner's massive rebellion - India Today

இதனால் ரஸ்யாவில் இரத்த வெள்ள ஓட கனவு கண்ட அமெரிக்காவுக்கு இது பேரிடியாக அமைந்தது. ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமால் இந்த கதை நடந்து முடிந்தது முற்றிலும் நவீனமான ஒரு நாடகம் மட்டுமே.

நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தமிழ் பாண்டிதரான ரணில்!

Next Story

பிரான்ஸ் போலீஸால் கொல்லப்பட்ட  நஹெல் யார்?